NAT 9.3

என் கைவளை பறித்துச் சென்றுவிட்டாரே!

589 கருவிளையொண்மலர்காள்! காயாமலர்காள்! * திருமால்
உருவொளிகாட்டுகின்றீர் எனக்குய்வழக்கொன்றுரையீர் *
திருவிளையாடுதிண்தோள் திருமாலிருஞ்சோலைநம்பி *
வரிவளையில்புகுந்து வந்திபற்றும்வழக்குளதே.
589 karuvil̤ai ŏṇmalarkāl̤ * kāyā malarkāl̤ * tirumāl
uru ŏl̤i kāṭṭukiṉṟīr * ĕṉakku uy vazhakku ŏṉṟu uraiyīr **
tiru vil̤aiyāṭu tiṇ tol̤ * tirumāliruñcolai nampi *
varival̤ai il pukuntu * vantipaṟṟum vazhakku ul̤ate? (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

589. O beautiful karuvilai flowers! Kāyām flowers! having the color of the lord Tell me how I can survive. He is the Nambi of Thirumālirunjolai on whose broad shoulders His consort rests Is it fair for Him to come into our house and steal my bangles?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒண் அழகான; கருவிளை மலர்காள்! காக்கணாம் பூக்களே!; காயாமலர்காள்! காயாமலர்களே!; திருமால் திருமாலின்; உரு ஒளி மேனி நிறத்தை; காட்டுகின்றீர் காட்டுகின்றீர்; எனக்கு எனக்கு; உய் வழக்கு பிழைக்கும்; ஒன்று வகையொன்றை; உரையீர் சொல்லுங்கள்; திரு பெரியபிராட்டியார்; விளையாடு விளையாடும்; திண் தோள் திண் தோள்களை உடைய; திருமாலிருஞ்சோலைநம்பி அழகர்; வரிவளை இல் வீட்டினுள் புகுந்து; புகுந்து எனது என் கை வளைகளை; வந்தி பலாத்காரமாக; பற்றும் பற்றிக் கொண்டு; வழக்கு செல்வது; உளதே? நியாயமோ?

Detailed WBW explanation

Oh resplendent karuvil̤ai flowers, with your creeper adorned in dark blue blossoms! Oh sacred kāyāmbū flowers, bearing the hue of dark purple! In your vivid colors, you evoke the divine form of Thirumāl. Pray, reveal unto me a path for liberation. Is it fitting for Thirumālirunjolai Azhagar, whose robust shoulders serve as the playground for Pirātti, and who is perfect in all His attributes, to enter my abode unbidden and forcibly take away my bangles?