NAT 12.6

கண்ணன் பக்கல் என்னை அனுப்புங்கள்

622 கார்த்தண்முகிலும்கருவிளையும்
காயாமலரும்கமலப்பூவும் *
ஈர்த்திடுகின்றனவென்னைவந்திட்டு
இருடீகேசன்பக்கல்போகேயென்று *
வேர்த்துப்பசித்துவயிறசைந்து
வேண்டடிசிலுண்ணும்போது * ஈதென்று
பார்த்திருந்துநெடுநோக்குக்கொள்ளும்
பத்தவிலோசநத்துய்த்திடுமின்.
622 kārt taṇ mukilum karuvil̤aiyum *
kāyā malarum kamalap pūvum *
īrttiṭukiṉṟaṉa ĕṉṉai vantiṭṭu *
iruṭīkecaṉ pakkal poke ĕṉṟu **
verttup pacittu vayiṟu acaintu *
veṇṭu aṭicil uṇṇum potu ītu ĕṉṟu *
pārttiruntu nĕṭu nokkuk kŏl̤l̤um *
pattavilocaṉattu uyttiṭumiṉ (6)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

622. “The cool rainy clouds, the karuvilai flowers, the kāyām blossoms and the lotus flowers all attract me and tell me to go to Rishikeshan’s place. He sweats, feels hungry and weak and wants food. He is looking for the wives of the rishis to bring him something to eat. Take me to the place( Baktha vilochanam)where he waits for food and leave me there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate conversion from poetry to prose (Aṉvayam). Please read the meanings (in black) continuously to form the sentence and understand the simplified meaning based on the Divyārtha Dīpikai for the verse.)
கார்த்தண் மழை கால குளிர்ந்த; முகிலும் மேகமும்; கருவிளையும் கருவிளைப் பூவும்; காயா மலரும் காயாம்பூவும்; கமலப் பூவும் தாமரைப் பூவுமாகிற இவைகள்; வந்திட்டு எதிரே வந்து நின்று; இருடீகேசன் பக்கல் கண்ணபிரான் பக்கம்; போகே என்று போ என; ஈர்த்திடுகின்றன என்னை என்னை ஈர்க்கின்றன; வேர்த்து வேர்வை வர பணிபுரிந்து; பசித்து பசித்து; வயிறு அசைந்து வயிறு தளர்ந்து; வேண்டு அடிசில் வேண்டிய பிரசாதம்; உண்ணும் போது உண்ணும் சமயம்; ஈது என்று இது என்று; பார்த்திருந்து பார்த்திருந்து; நெடு நோக்குக் தொலை நோக்கு; கொள்ளும் கொண்டிருக்கும்; பத்தவிலோசனத்து பக்த விலோசனம் என்னுமிடத்தில்; உய்த்திடுமின் என்னைச் சேர்த்துவிடுங்கள்
kārttaṇ the rainy season cool; mukilum clouds; karuvil̤aiyum the karuvilai flower,; kāyā malarum the kayaam flower; kamalap pūvum and the lotus flower - all these; vantiṭṭu stand before me; īrttiṭukiṉṟaṉa ĕṉṉai and make me; poke ĕṉṟu go in; iruṭīkecaṉ pakkal Kannan's direction; uyttiṭumiṉ please leave me; pattavilocaṉattu in the place called “Bhakta Vilochanam”; nĕṭu nokkuk where with far reaching gaze; kŏl̤l̤um and fixed vision; verttu after working hard and sweating; pacittu and feeling hungry; vayiṟu acaintu with weakened stomach; pārttiruntu He watches out for; veṇṭu aṭicil the prasadam that is wished for; ītu ĕṉṟu saying that this is the; uṇṇum potu time to eat

Detailed WBW explanation

During the monsoon season, the clouds that had amassed, the karuvilā flower from a sinuous creeper, the kāyāmbū (a purple-hued flower), and the sacred lotus appeared before me, urging me with a divine compulsion, "You too shall seek Hṛṣīkēśa (Emperumān)." Consequently, I implore you to guide me to Bhaktavilocanam, the hallowed realm where Kaṇṇan resided

+ Read more