NAT 12.2

மாயனின் ஆய்ப்பாடிக்கே என்னை அனுப்புங்கள்

618 நாணியினியோர்கருமமில்லை
நாலயலாரும்அறிந்தொழிந்தார் *
பாணியாதென்னைமருந்துசெய்து
பண்டுபண்டாக்கவுறுதிராகில் *
மாணியுருவாயுலகளந்த
மாயனைக்காணில்தலைமறியும் *
ஆணையால்நீரென்னைக்காக்கவேண்டில்
ஆய்ப்பாடிக்கேயென்னையுய்த்திடுமின்.
618 nāṇi iṉi or karumam illai *
nāl ayalārum aṟintŏḻintār *
pāṇiyātu ĕṉṉai maruntu cĕytu *
paṇṭu paṇṭu ākka uṟutirākil **
māṇi uruvāy ulaku al̤anta *
māyaṉaik kāṇil talaimaṟiyum *
āṇaiyāl nīr ĕṉṉaik kākka veṇṭil *
āyppāṭikke ĕṉṉai uyttiṭumiṉ. (2)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

618. She says, “Don't feel embarrassed anymore. All the neighbors know about our love. Don’t try to make me the person I was before. I have changed, I am in love with Kannan. If you really want to save me, take me to the cowherd village of Gokulam. I will survive only if I see the Māyan who measured the world as a dwarf.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாணி இனி இனிமேல் வெட்கப்பட்டு; ஓர் கருமம் இல்லை ஒரு பயனுமில்லை; நால் அயலாரும் ஊரிலுள்ளாரெல்லாரும்; அறிந்து என் விஷயத்தை அறிந்து; ஒழிந்தார் கொண்டுவிட்டனர்; பாணியாது காலதாமதமின்றி; என்னை என்னை; மருந்து வேண்டிய; செய்து பரிகாரங்களைச் செய்து; பண்டு பண்டு பழையபடி; ஆக்க ஆக்க; உறுதிராகில் நினைப்பீர்களாகில்; நீர் என்னை நீங்கள் என்னை; ஆணையால் சத்தியமாக; காக்க வேண்டில் காக்க விரும்பினால்; என்னை என்னை; ஆய்ப்பாடிக்கே திருவாய்ப்பாடியிலேயே; உய்த்திடுமின் கொண்டு சேர்த்துவிடுங்கள்; மாணி உருவாய் வாமன உருவுடன்; உலகு அளந்த உலகங்களை அளந்த; மாயனை பெருமானை; காணில் காணப்பெற்றால்; தலைமறியும் நோயானது நீங்கும்

Detailed WBW explanation

In the profound realization that modesty no longer serves its purpose, for the community has already become aware of my circumstances, I find myself at a crossroads. Should you desire to witness my return to the state of innocence I possessed before my communion with Emperumān, before I drifted away and endured such tribulations, I beseech you to hasten, without delay,

+ Read more