NAT 12.1

மதுரைப்புறத்து என்னை அழைத்துச் செல்லுங்கள்

617 மற்றிருந்தீர்கட்கறியலாகா
மாதவனென்பதோரன்புதன்னை *
உற்றிருந்தேனுக்குரைப்பதெல்லாம்
ஊமையரோடுசெவிடர்வார்த்தை *
பெற்றிருந்தாளையொழியவேபோய்ப்
பேர்த்தொருதாயில்வளர்ந்தநம்பி *
மற்பொருந்தாமற்களமடைந்த
மதுரைப்புறத்தென்னையுய்த்திடுமின். (2)
617 ## maṟṟu iruntīrkaṭku aṟiyalākā *
mātavaṉ ĕṉpatu or aṉpu taṉṉai *
uṟṟu irunteṉukku uraippatu ĕllām *
ūmaiyaroṭu cĕviṭar vārttai **
pĕṟṟiruntāl̤ai ŏḻiyave poyp *
perttu ŏru tāy il val̤arnta nampi *
maṟpŏruntāmal kal̤am aṭainta *
maturaip puṟattu ĕṉṉai uyttiṭumiṉ. (1)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

617 She tells her relatives, “You don’t understand that I love only Mādhavan whom no one can know. Saying that you will wed me to someone is meaningless like the dumb talking to the deaf. Leaving His begotten mother(Devaki), He was raised by Yashodā His foster mother. Take me near Madhura and leave me there before he goes to the battlefield to fight with the wrestlers. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மற்று எனக்கு எதிர்மாறாக; இருந்தீர்கட்கு இருப்பவரை; அறியலாகா அறிய முடியாது:; மாதவன் மாதவன்; என்பது ஓர் விஷயமான; அன்பு தன்னை காதலை; உற்று அடைந்திருக்கிற; இருந்தேனுக்கு எனக்கு; உரைப்பது நீங்கள் சொல்வது; எல்லாம் எல்லாம்; ஊமையரோடு ஊமையும்; செவிடர் செவிடனும் கூடி; வார்த்தை பேசிக்கொள்வது போல் வீணானது; பெற்று என்னை பெற்ற தாயான; இருந்தாளை தேவகியை; ஒழியவே போய் விட்டொழிந்து; பேர்த்து ஒரு வேறொரு தாயின்; தாய் இல் இல்லத்திலே; வளர்ந்த நம்பி வளர்ந்தவனும்; மற் பொருந்தாமல் மல்லர் வருவதற்கு; களம் முன்பே வந்து; அடைந்த சேர்ந்த; மதுரைப் புறத்து மதுரைக்கு; என்னை கொண்டு; உய்த்திடுமின் சேர்ந்துவிடுங்கள்

Detailed WBW explanation

Your circumstances diverge significantly from mine. Any counsel you offer, born of an affection for Mādhavan, the divine consort of Śrī Mahālakṣmī—which remains beyond your grasp—proves as futile as discourse between one who cannot speak and another who cannot hear. There exists but a single task you might fulfill. Escort me to a sacred site near Mathurā, where Kaṇṇan,

+ Read more