MUT 93

ஆலிலைமேல் துயின்றவனை மனத்தில் வை

2374 நினைத்துலகிலார்தெளிவார்? நீண்டதிருமால் *
அனைத்துலகுமுள்ளொடுக்கியால்மேல் * - கனைத்துலவு
வெள்ளத்தோர்பிள்ளையாய் மெள்ளத்துயின்றானை *
உள்ளத்தேவைநெஞ்சே! உய்த்து.
2374 niṉaittu ulakil ār tĕl̤ivār? * nīṇṭa tirumāl *
aṉaittu ulakum ul̤ ŏṭukki ālmel ** - kaṉaittu ulavu
vĕl̤l̤attu or pil̤l̤aiyāy * mĕl̤l̤at tuyiṉṟāṉai *
ul̤l̤atte vai nĕñcame! uyttu 93

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2374. Thirumāl swallowed all the worlds, kept them in his stomach at the end of the eon and slept on a banyan leaf as a baby on the flood. Who knows what will happen to this world? O heart! Keep the lord inside you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! ஓ மனமே!; நீண்ட உலகை அளப்பதற்காக வளர்ந்த; திருமால் பெருமான்; கனைத்து ஒலிக்கும் பரந்த; உலவு பிரளய; வெள்ளத்து ஓர் வெள்ளத்திலே ஒரு; பிள்ளையாய் ஒப்பற்ற சிறு குழந்தையாய்; அனைத்து உலகும் உலகங்களை எல்லாம்; உள் ஒடுக்கி தன் வயிற்றில் அடக்கி; ஆல்மேல் மெள்ள ஆலிலைமேல் மெள்ள; துயின்றானை சயனித்திருந்தவனை; உலகில் இவ்வுலகில் அவனைத் தஞ்சமாக; நினைத்து நினைத்து; ஆர் தெளிவார்? தெளிவு பெறுபவர் யாரேனும் உண்டோ?; உய்த்து ஒருவரும் இல்ல நீயாவது புகலாக நினைத்து; உள்ளத்தே அவனை உன் உள்ளத்தில்; வை வைப்பாயாக
nenjĕ ŏh heart!; nīṇda one who grew (to measure the worlds); thirumāl̤ consort of ṣrī mahālakshmi; kanaiththu ulavu vel̤l̤aththu in the deluge when spread all over, making huge noise; ŏr pil̤l̤aiyāy as a unique infant; ananiththu ulagum all the worlds; ul̤ odukki keeping them inside his stomach; āl mĕl on top of a tender banyan leaf; mel̤l̤ath thuyinṛānai emperumān who reclined slowly on it; ulagil in this world; ninaiththu meditating on him (as the refuge); ār thel̤ivār īs there anyone who gets clarity? (there is none); uyththu bringing him (at least you) [āzhvār tells his heart]; ul̤l̤aththu vai keep him inside.