MUT 68

கண்ணனுக்கு உரிய மலை வேங்கடம்

2349 பார்த்தகடுவன் சுனைநீர்நிழல்கண்டு *
பேர்த்தோர் கடுவனெனப்பேர்ந்து * - கார்த்த
களங்கனிக்குக் கைநீட்டும்வேங்கடமே * மேனாள்
விளங்கனிக்குக் கன்றெறிந்தான்வெற்பு.
2349 pārtta kaṭuvaṉ * cuṉai nīr nizhal kaṇṭu *
perttu or kaṭuvaṉ ĕṉap perntu ** - kārtta
kal̤aṅ kaṉikkuk * kai nīṭṭum veṅkaṭame * mel nāl̤
vil̤aṅ kaṉikkuk kaṉṟu ĕṟintāṉ vĕṟpu 68

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2349. The lord who threw the calf at the Vilam tree and destroyed the Asurans stays in Thiruvenkatam hills where a monkey that plucks a fruit from a vilam tree, sees his own shadow in the water of a spring, thinks another monkey has his fruit and extends his hands and asks the shadow monkey to give it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுனை திருமலைச் சுனையில்; பார்த்த கவிழ்ந்து பார்த்த; கடுவன் ஆண் குரங்கு; நீர் நீரிலே; நிழல் கண்டு தன் நிழலைக் கண்டு; பேர்த்து தனக்கு எதிரியென அஞ்சி; ஓர் வேறு ஒரு; கடுவன் ஆண் குரங்கு; என இருப்பதாக; பிரமித்து பிரமித்து; பேர்ந்து அவ்விடம் விட்டு நீங்கி; கார்த்த கரிய; களங் கனிக்கு களாப்பழத்தை; கை நீட்டும் பறிக்கக் கையை நீட்டும்; வேங்கடமே திருமலையப்பன் உறையும்; மேல் நாள் முன்பு; விளங் கனிக்கு விளாங்கனிக்கு; கன்று கன்றாக வந்த அசுரனை; எறிந்தான் தடியாக வீசி எறிந்த; வெற்பு மலை திருவேங்கட மலை
sunai nīr in the waters of reservoir at thirumalai; pārththa looking down; kaduvan male monkey; nizhal kaṇdu looking at its shadow reflected in the water; pĕrththu ŏr kaduvan ena confusing it for another (inimical) monkey; pĕrndhu starting to leave that place out of fear; kārththa kalanganikkuk kai nīttum stretching out its hand in order to get a kal̤ā (Carissa) fruit; vĕngadamĕ the thirumalai hills; mĕl nāl̤ once upon a time; vil̤anganikku in order to obtain wood apple fruit (inside which a demon had pervaded); kanṛu erindhān emperumān who threw a calf, as a throwing stick, in order to fell the wood apple; veṛpu divine hill