MUT 51

இலங்கை எரித்தவனே கண்ணன்

2332 அவனே அருவரையால் ஆநிரைகள்காத்தான் *
அவனே அணிமருதஞ்சாய்த்தான் * - அவனே
கலங்காப்பெருநகரம் காட்டுவான்கண்டீர் *
இலங்காபுரமெரித்தானெய்து.
2332 avaṉe aru varaiyāl * ā niraikal̤ kāttāṉ *
avaṉe aṇi marutam cāyttāṉ ** - avaṉe
kalaṅkāp pĕru nakaram * kāṭṭuvāṉ kaṇṭīr *
ilaṅkāpuram ĕrittāṉ ĕytu -51

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2332. He protected the cows and the cowherds with Govardhanā mountain when there was a big storm and broke the marudam trees when Asurans came as those trees. As Rāma, he fought the Raksasas and burned Lankā. He will give you Mokshā, the divine place where there is no sorrow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அரு அசைக்க முடியாத; வரையால் மலையால்; ஆநிரைகள் பசுக் கூட்டங்களை; காத்தான் ரக்ஷித்தவன்; அவனே அப்பெருமானே; கண்டீர் ஆவான்; அணி சேர்ந்திருந்த; மருதம் மருத மரங்களை; சாய்த்தான் முறித்துத் தள்ளினவனும்; அவனே அந்த பெருமானே; எய்து அம்புகளைப் பிரயோகித்து; இலங்கா புரம் இலங்கையை; எரித்தான் அழித்தவனும் அவனே; கலங்கா கலக்கமில்லாத; பெரு நகரம் பரமபதத்தை அந்த எம்பெருமானே; காட்டுவான் காட்டித்தருவான்
aruvaraiyāl with the help of gŏvardhana hill which nobody could move; āniraigal̤ herds of cows; kāththān protected them mercifully; avanĕ kaṇdīr see, it was only emperumān; aṇi marudham the two arjuna trees which were very close to each other; sāyththān felled it; avanĕ kaṇdīr see, it was only emperumān; eydhu shooting arrows; ilangāpuram the town of lankā; eriththān one who burnt it; avanĕ he himself; kalangāp perunagaram paramapadham which is without any bewilderment; kāttuvān kaṇdīr will show the way, see that.