MUT 12

ஐம்புலன் அடக்கினோர் பரமனைக் காண்பர்

2293 அறிவென்னும்தாள்கொளுவி ஐம்புலனும்தம்மில் *
செறிவென்னும்திண்கதவஞ்செம்மி * - மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார்காண்பரே * நாள்தோறும்
பைங்கோதவண்ணன்படி.
2293 aṟivu ĕṉṉum tāl̤ kŏl̤uvi * aimpulaṉum tammil *
cĕṟivu ĕṉṉum tiṇ katavam cĕmmi ** - maṟai ĕṉṟum
naṉku oti * naṉku uṇarvār kāṇpare * nāl̤ toṟum
paiṅkota vaṇṇaṉ paṭi -12

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

2293. Devotees who cultivate knowledge, recite the Vedās well, control and close the door to the feelings of five senses and meditate on the beautiful ocean-colored lord will see his nature every day in the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மறை என்றும் வேதத்தை இடைவிடாது; நன்கு ஓதி நன்றாக ஓதி ஆத்மா பரமாத்மா; அறிவு என்னும் என்னும் ஞானமாகிற; தாள் கொளுவி தாழ்ப்பாளைப் போட்டு; ஐம்புலனும் ஐந்து இந்திரியங்களையும்; தம்மில் தம் வழி போகாதபடி; செறிவு என்னும் அடக்கி வைப்பதற்கான; திண் திடமான; கதவம் செம்மி கதவை அடைத்து; நன்கு உணர்வார் நன்கு தியானிப்பவர்கள்; பைங்கோத கடல்வண்ண; வண்ணன் பெருமானின்; படி தன்மைகளை; நாள்தோறும் தினந்தோறும்; காண்பரே காண்பார்கள்
maṛai vĕdham (sacred text); enṛum without a break; nangu ŏdhi practicing well; aṛivu ennum knowledge (of āthmā, soul and paramāthmā, supreme being); thāl̤ kol̤uvi latching; aimpulanum the five sensory perceptions; thammil seṛivu ennum keeping them under control in their respective matter; thiṇ kadhavam semmi closing them with a strong door; nangu uṇarvār those who meditate well; paingŏdha vaṇṇan padi the characteristics of emperumān who has the complexion of green ocean; nāl̤ dhŏṛum every day; kāṇbar will be able to see