கண்ணிநுண்சிறுத்தாம்பு தனியன்கள் / Kaṇṇiṇuṇchiṛuthāmbu taṉiyaṉkal̤

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த *
மாறன் சடகோபன் வண் குருகூர் - ஏறு *
எங்கள் வாழ்வா மென்றேத்தும் மதுரகவியார் *
எம்மை ஆள்வார் அவரே அரண்

veṟŏṉṟum nāṉaṟiyeṉ vetam tamiḻ cĕyta *
māṟaṉ caṭakopaṉ vaṇ kurukūr - eṟu *
ĕṅkal̤ vāḻvā mĕṉṟettum maturakaviyār *
ĕmmai āl̤vār avare araṇ
ஸ்ரீமந் நாதமுனிகள் / śrīman nātamuṉikal̤
Verondrum

Word by word meaning

வேறொன்றும் நம்மாழ்வார் தவிர வேறொன்றும்; நானறியேன் நான் அறியேன்; வேதம் வேதார்த்தங்களை; தமிழ் செய்த தமிழில் அருளிச்செய்த; மாறன் சடகோபன் மாறன் என்னும் நம்மாழ்வாரும்; வண்குருகூர் அழகிய திருகுருகூரில் அவதரித்தவரும்; ஏறு, எங்கள் எங்கள் தலைவரும்; வாழ்வாம் என்றேத்தும் எமக்கு உஜ்ஜீவனராவர் என்று; மதுரகவியார் மதுரகவி ஆழ்வார்; எம்மை ஆள்வார் நம்மை ஆள்பவர்; அவரே அரண் அவரே நமக்குப் புகலிடம்