தனியன் / Taniyan

திருவிருத்தம் தனியன்கள் / Thiruvirutham taṉiyaṉkal̤

கரு விருத்தக்குழி நீத்த பின் காமக் கடுங்குழி வீழ்ந்து *
ஒருவிருத்தம் புக்குழலுறுவீர்! உயிரின் பொருள்கட்கு *
ஒருவிருத்தம் புகுதாமல் குருகையர்கோனுரைத்த *
திருவிருத்தத் தோரடி கற்று இரீர் திருநாட்டகத்தே

karu viruttakkuḻi nītta piṉ kāmak kaṭuṅkuḻi vīḻntu *
ŏruviruttam pukkuḻaluṟuvīr! uyiriṉ pŏrul̤kaṭku *
ŏruviruttam pukutāmal kurukaiyarkoṉuraitta *
tiruviruttat toraṭi kaṟṟu irīr tirunāṭṭakatte
கிடாம்பியாச்சான் / kiṭāmpiyāccāṉ

Word by word meaning

கருவிருத்த குழி கர்ப்பக் குழியிலிருந்து; நீத்த பின் வெளி வந்த பின்; காமக் கடுங்குழி காமம் என்னும் குழியில்; வீழ்ந்து வீழ்ந்து, எதற்கும் உபயோகமில்லாத; ஒரு விருத்தம் கிழத்தனத்தை; புக்கு அடைந்து; உழல் உறுவீர்! அலையும் உலகத்தவர்களே!; உயிரின் ஜீவாத்மாவகிற; பொருள்கட்கு பொருள்களுக்கு; ஒரு விருத்தம் இடயூறு சிறிதும்; புகுதாமல் நேராதபடி; குருகையர் திருக்குருகூரில் அவதரித்த; கோன் நம்மாழ்வார்; உரைத்த அருளிச்செய்த; திருவிருத்தத்து திருவிருத்தத்தின்; ஓர் அடி கற்று ஒரு அடியைக் கற்று; திருநாடகத்தே பரமபதத்தை; இரீர் அடைவீர்களாக