TVT 96

வெறி விலக்குவிக்கத் தலைவி நினைத்தல்

2573 வணங்கும்துறைகள் பலபலவாக்கி * மதிவிகற்பால்
பிணங்குஞ்சமயம் பலபலவாக்கி * அவையவைதோறு
அணங்கும்பலபலவாக்கிநின்மூர்த்திபரப்பிவைத்தாய்
இணங்குநின்னோரையில்லாய்! * நின்கண்வேட்கை யெழுவிப்பனே.
2573 vaṇaṅkum tuṟaikal̤ * pala pala ākki * mati vikaṟpāl
piṇaṅkum camayam * pala pala ākki ** avai avaitoṟu
aṇaṅkum pala pala ākki niṉ mūrtti parappi vaittāy *
iṇaṅku niṉṉorai illāy * niṉkaṇ veṭkai ĕzhuvippaṉe96

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2573. She says, “You created many yugas, many gods and many religions, and wise people worship the gods of those religions and follow their teachings. There is no other god like you. If my mother calls the Velan and asks him about me, I will not perform the rituals he asks me to do. My love for you is the only true thing and I will worship only you. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வணங்கும் கடவுளை வணங்குகிற; துறைகள் வகைகள்; பலபல ஆக்கி பலவற்றை உண்டாக்கி; மதி விகற்பால் புத்தி பேதத்தினால்; பிணங்கும் ஒன்றொடொன்று மாறுபடுகிற; சமயம் பலபல மதங்கள் பலவற்றையும்; ஆக்கி உண்டாக்கி; அவை அவை தோறு அம்மதங்கள் தோறும்; அணங்கும் தெய்வங்கள்; பலபல ஆக்கி பற்பலவற்றையும் உண்டாக்கி; நின் மூர்த்தி உனது வடிவத்தை; பரப்பி வைத்தாய் விஸ்தரித்து வைத்தாய்; நின்னோரை உன்னோடு; இணங்கும் இணைத்துச் சொல்லத்தக்க; இல்லாய்! எவருமில்லாதவனே!; நின்கண் வேட்கை உன்னிடத்திலேயே பக்தியை; எழுவிப்பனே வளரச்செய்வேன்
vaṇangum to attain (other deities); pala pala many; thuṛaigal̤ various deities who instruct; ākki created; madhi vigaṛpāl due to difference in intellect; piṇangum disagreeing; palapala of many types; samayam philosophies; ākki created; avaiyavaidhŏṛu among all those philosophies; ninmūrththi as your forms; palapala of many types; aṇangum deities; ākki created as being apt to be attained; parappi vaiththāy you created expansively; iṇangu (with those deities) appearing to be a match; ninnŏrai those who are an equal to you; illāy ŏh, one who doesn’t have!; ninkaṇ towards you; vĕtkai desire; ezhuvippanĕ ī will create