TVT 95

தலைவி அறத்தொடு நிற்கத் துணிதல்

2572 ## யாதானும் ஓராக்கையிற்புக்கு * அங்காப்புண்டுமாப்பவிழ்ந்தும்
மூதாவியில்தடுமாறும்உயிர்முன்னமே * அதனால்
யாதானும்பற்றிநீங்கும்விரதத்தைநல்வீடுசெய்யும்
மாதாவினைப்பிதுவை * திருமாலைவணங்குவனே.
2572 ## yātāṉum or ākkaiyil pukku * aṅku āppuṇṭum āppu avizhntum *
mūtu āviyil taṭumāṟum * uyir muṉṉame ** ataṉāl
yātāṉum paṟṟi nīṅkum viratattai nal vīṭucĕyyum *
mātāviṉai pituvai * tirumālai vaṇaṅkuvaṉe95

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2572. She says, “The soul comes to this earth, enters a body, lives and when the body grows old, it suffers and leaves this world. I don’t want to be born—I want to be always with him. I want to find some tapas that will take me to Mokshā and remove the results of my karmā. He is my mother and father and can give me Mokshā— I worship him to reach him. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உயிர் முன்னமே ஜீவனானது நெடு நாளாக; மூது ஆவியில் பலவகை பிறப்புக்களுள்; யாதானும் ஓர் ஏதோ ஒரு; ஆக்கையில் புக்கு சரீரத்தில் பிரவேசித்து; அங்கு ஆப்புண்டும் அங்கு அவ்வுடம்பில் கட்டுப்பட்டும்; ஆப்பு அவிழ்ந்தும் பிறகு பந்தத்திலிருந்து விடுபட்டும்; தடுமாறும் அலையும் தன்மையுடையது; அதனால் ஆதலால்; யாதானும் பற்றி ஏதாவது ஒரு உபாயத்தைப் பற்றி; நீங்கும் விரதத்தை நீங்கும் விரதத்தை; நல் வீடு செய்யும் நன்றாக விடுவிப்பதைச்செய்யும்; மாதாவினை மாதாவைப் போன்ற பிரியமானவனும்; பிதுவை பிதாவைப் போன்ற ஹிதமானவனுமான; திருமாலை திருமாலையே; வணங்குவனே சரணமடைந்திருப்பேன்
uyir jīvāthmā (soul); munnamĕ from time immemorial; yādhānum ŏr in something or other; ākkaiyil physical form; pukku entering; angu in that form; āppu uṇdum getting tied down to it (due to prārabdha karma (past deed which has started yielding result)); āppu avizhndhum getting liberated from it (due to destruction of prārabdha karma); mūdhu being ancient; āviyil in the subtle form; thadumāṛum will keep fluctuating; adhanāl due to that repeated act; yādhānum some matter (related to prākrutham, the causative matter); paṝi holding on to; nīngum moving away (from matter related to sarvĕṣvaran); viradhaththai (my) vow; nal vīdu seyyum one who liberated me; māthāvinai being affectionate like mother; pithuvai being well-intentioned like father; thirumālai the consort of ṣrī mahālakshmi; vaṇanguvan ī will attain