TVT 90

தலைவனைப் பிரிந்த தலைவி, கால நீட்டிப்புக்கு ஆற்றாமல் உரைத்தல்

2567 தலைப்பெய்துயான் உன்திருவடிசூடுந்தகைமையினால் *
நீலைபெய்தவாக்கைக்கு நோற்றவிம்மாயமும் * மாயம்செவ்வே
நிலைப்பெய்திலாதநிலைமையும் காண்தோறுஅசுரர்குழாம்
தொலைப்பெய்தநேமியெந்தாய்! * தொல்லையூழி சுருங்கலதே.
2567 talaippĕytu yāṉ uṉ * tiruvaṭi cūṭum takaimaiyiṉāl *
nilaippu ĕyta ākkaikku * noṟṟa im māyamum ** māyam cĕvve
nilaippu ĕytilāta nilaimaiyum kāṇtoṟu acurar kuzhām *
tŏlaip pĕyta nemi ĕntāy * tŏllai ūzhi curuṅkalate90

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2567. She says, “I was born to worship you whose discus destroyed the clan of Asuras. I can only serve you with this body, but I cannot reach your feet in this illusory birth. I have been on this earth a long time, O father, but I cannot reach you. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அசுரர் குழாம் அசுரர் கூட்டத்துக்கு; தொலைப் பெய்த அழிவை ஏற்படுத்தின; நேமி எந்தாய்! சக்கரத்தையுடையவனே!; யான் தலைப் பெய்து நான் உன்னை அடைந்து; உன் திருவடி உன் திருவடிகளை; தகைமையினால் தலைமேல்; சூடும் கொள்ளும்படி; நிலைப்பு எய்த நிலைப்பெற்றிருக்கும்; ஆக்கைக்கு இவ்வுடம்பைப் பெறுதற்கு; இம் மாயமும் என்ன ஆச்சர்யம்; நோற்ற என்ன தவம் செய்தேனோ; மாயம் செவ்வே இந்த மாயச்செயல் செய்து; நிலைப்பு இதற்கு ஒரு முடிவு; எய்திலாத நிலைமையும் பெறாத நிலையையும்; காண்தோறு நினைக்கும் போதெல்லாம்; தொல்லை அநாதியான காலம்; ஊழி ஊழி போல் நீள்கிறதே; சுருங்கலதே கழிவதில்லையே என்று வருந்துகிறேன்
asurar demons’; kuzhām for their clan; tholai destruction; peydha one who made; nĕmi one who has the divine disc; endhāy ŏh my swāmy (lord)!; yān ī; thalaippeydhu attaining; un thiruvadi your divine feet; sūdum donning on my head; thagaimaiyināl due to the nature; nilaippu eydha having firmness; ākkaikku to get the form; nŏṝa carrying out good deeds (for many thousands of births); i this; māyamum amaśement; māyam amaśing form; sevvĕ very well (uniform); nilaippeydhu ilādha not having firmness; nilaimaiyum position; kāṇ dhŏṛu whenever ī think of; thollai being ancient; ūzhi kalpam (brahmā’s lifetime); surungaladhu is not shrinking