TVT 86

தலைவனைப் பிரிந்த தலைவி புலம்பல்

2563 அடைக்கலத்தோங்கு கமலத்தலரயன்சென்னியென்னும் *
முடைக்கலத்தூண்முன் அரனுக்குநீக்கியை * ஆழிசங்கம்
படைக்கலமேந்தியைவெண்ணெய்க்கன்றாய்ச்சி வன்தாம்புகளால்
புடைக்கலந்தானைஎம்மானை * என்சொல்லிப் புலம்புவனே?
2563 aṭaik kalattu oṅku * kamalattu alar ayaṉ cĕṉṉi ĕṉṉum *
muṭaik kalattu ūṇ * muṉ araṉukku nīkkiyai ** āzhi caṅkam
paṭaikkalam entiyai vĕṇṇĕykku aṉṟu āycci vaṉ tāmpukal̤āl *
puṭaikkalantāṉai * ĕmmāṉai ĕṉ cŏllip pulampuvaṉe?86

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2563. She says, “The lord with a discus and a conch helped Shivā when Brahmā’s skull was stuck to his hands and made it fall off. When he stole butter Yashodā tied him (damodara) with rough ropes and beat him. What can I say? I can only prattle on praising my dear lord. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடைக்கலத்து புகலிடமான எம்பெருமானிடம்; ஓங்கு கமலத்து வளர்ந்த தாமரை; அலர் அயன் பூவில் பிறந்த பிரமனின்; சென்னி என்னும் தலை என்னும்; முடைக்கலத்து முடை நாற்றமுடைய கபாலத்தில்; ஊண் முன் உணவு யாசித்தலான துன்பத்தை முன்பு; அரனுக்கு நீக்கியை ருத்ரனுக்கு போக்கினவனும்; ஆழி சங்கம் சங்கு சக்கரங்களை; படைக்கலம் ஏந்தியை ஆயுதமாக உடையவனும்; வெண்ணெய்க்கு வெண்ணெய்க்காக; அன்று கையும் களவுமாக; ஆய்ச்சி யசோதையிடம் அகப்பட்டு; வன் தாம்புகளால் வலிய கயிற்றால்; புடைக்கலந்தானை கட்டுண்ட; எம்மானை பெருமானை; என் சொல்லி நான் என்னவென்று கூறி; புலம்புவனே? புலம்புவேன்?
adaikkalaththu as an entity to be protected; ŏngu grown well; kamalaththu (having been born in the divine navel) lotus’; alar born in a flower; ayan brahmā’s; senni ennum known as head; udai having an unpleasant smell; kalaththu in the vessel; ūṇ food; mun in earlier time; aranukku for rudhra; nīkkiyai one who removed; āzhisangam divine disc and divine conch; padai divine weapons; kalan as ornaments; ĕndhiyai one who donned; anṛu during the time of krishṇāvathāram (incarnation as krishṇa); veṇṇey for butter; āychi yaṣodhāp pirātti; van strong; thāmbugal̤āl ropes; pudaikka to hit; alandhānai one who had trouble; emmānai one who is my lord; en solli by speaking about what deficiencies; pulambuvan could ī call?