TVT 84

தலைவனைக் காணத் தலைவி விரைதல்

2561 தையல்நல்லார்கள் குழாங்கள்குழியகுழுவினுள்ளும் *
ஐயநல்லார்கள் குழியவிழவினும் * அங்கங்கெல்லாம்
கையபொன்னாழிவெண்சங்கொடும்காண்பானவாவுவன் நான்
மையவண்ணா! மணியே! * முத்தமே! என்தன் மாணிக்கமே.
2561 taiyal nallārkal̤ kuzhāṅkal̤ * kuzhiya kuzhuviṉul̤l̤um *
aiya nallārkal̤ * kuzhiya vizhaviṉum ** aṅku aṅku ĕllām
kaiya pŏṉ āzhi vĕṇ caṅkŏṭum kāṇpāṉ avāvuvaṉ nāṉ *
maiya vaṇṇā maṇiye * muttame ĕṉ taṉ māṇikkame84

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2561. She says, “You have the color of kohl and you shine like a jewel. You are a pearl. You are my diamond. O dear one, I want to see you among the beautiful girls at the festivals holding your white conch and golden discus in your hands. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தையல் நல்லார்கள் அழகிய சிறந்த பெண்களின்; குழாங்கள் கூட்டங்களிலும்; குழிய திரண்டிருக்கும்; குழுவினுள்ளும் குழுவினுள்ளும்; ஐய நல்லார்கள் அறிவாளிகள் நடுவிலும்; குழிய கூடியிருக்கும்; விழவினும் திருவிழாக்களிலும்; அங்கு அங்கு எல்லாம் எல்லா இடங்களிலும்; மைய வண்ணா! அஞ்சன் வண்ணனே!; மணியே! மணியே!; முத்தமே! என்தன் முத்தே! என்; மாணிக்கமே! மாணிக்கமே!; கைய பொன் ஆழி கையில் பொன்னாழியோடும்; வெண் சங்கொடும் வெண் சங்கோடும்; காண்பான் உன்னைக் கண்டு வணங்க; நான் நான்; அவாவுவன் விருப்பமுடையவளாக இருக்கிறேன்
thaiyal nal̤l̤ārgal̤ gems of women; kuzhāngal̤ association; kuzhiya huge; kuzhuvinul̤l̤um in gatherings; aiyanallārgal̤ wise men; kuzhiya huge; vizhavinum in celebrations; angangellām at all those places; maiya like black pigment; vaṇṇā one who has a form (such that the eyes of the beholder would feel cool); maṇiyĕ one who is easily approachable; muththamĕ one who is cool like a pearl; en than as a lord for me; māṇikkamĕ one who is eminent like a carbuncle; kaiya in the divine hands; pon radiant; āzhi with divine disc; veṇ whitish; sangodum with ṣrī pānchajanyam (divine conch); nān ī; kāṇbān to worship (you); avāvuvan desired