TVT 83

அன்றிலின் குரலுக்கு ஆற்றாத தலைவியின் நிலைகண்டு தோழி இரங்குதல்

2560 விளரிக்குரலன்றில் மென்படைமேகின்றமுன்றிற்பெண்ணை *
முளரிக்குரம்பையிதுவிதுவாக * முகில்வண்ணன்பேர்
கிளரிக்கிளரிப்பிதற்றும்மெல்லாவியும்நைவுமெல்லாம்
தளரில்கொலோ? அறியேன் * உய்யலாவது இத்தையலுக்கே.
2560 vil̤arik kural aṉṟil * mĕṉ pĕṭai mekiṉṟa muṉṟil pĕṇṇai *
mul̤arik kurampai ituituvāka ** mukil vaṇṇaṉ per
kil̤arik kil̤arip pitaṟṟum mĕl āviyum naivum ĕllām *
tal̤ariṉ kŏlo aṟiyeṉ * uyyal āvatu it taiyalukke?83

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2560. Her friend says, “The male andril living in the cage on the palm tree calls his mate and his cooing is like the vilari raga. My friend hears that and her life and body grow weak and she continuously speaks his name. I don’t know how she will survive. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விளரிக் குரல் விளரி என்னும் இசையையுடைய; அன்றில் அன்றில் பறவை; மென் பெடை தன் பெடையுடன்; மேகின்ற தழுவி இருக்கிறது; முன்றில் முன் வாசலிலுள்ள; பெண்ணை பனைமரத்தில்; முளரிக் குரம்பை முட்களால் ஆன கூடு; மெல் இவள் இப்படி மெலிவடைந்த; ஆவியும் நைவும் உடலும் உயிருமாய் இருக்க; இது இதுவாக எதிரில்; எல்லாம் எல்லாம் அருகில் இப்படி இருக்க; முகில் காளமேகம் போன்ற; வண்ணன் நிறமுடையவனின்; பேர் பெயரை இவள் வாய்; கிளரிக் கிளரி திரும்பத் திரும்ப; பிதற்றும் பிதற்றுகிறது; தளரின் கொலோ இவ்விதம் தளர்ந்து போன; இத்தையலுக்கே இப்பெண்ணுக்கு; உய்யல் ஆவது உயிர் தரிக்குமோ; அறியேன் நான் அறியேன் என்கிறாள் தோழி
mel having a soft nature; pedai with female bird; mĕginṛa being united together; vil̤ari in a high pitch; kural voice; anṛil nightingale bird’s; munṛil in the frontyard; peṇṇai on top of the palm tree; mul̤ari made of lotus flower; kurambai nest; idhu idhuvāga tormenting permanently; mugil like cloud; vaṇṇan sarvĕṣvaran who has a form like that; pĕr divine name; kil̤arik kil̤ari taking it repatedly; pidhaṝum babbling; mel soft; āviyum vital air; naivum (body) crumbling; ellām since all these happened; iththaiyalukku for this girl; uyyalāvadhu to be alive; thal̤aril kolŏ is it possible; ariyĕn ī am not sure