TVT 73

பிறையுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சி கண்டு பாங்கி இரங்கல்

2550 வால்வெண்ணில வுலகாரச்சுரக்கும்வெண்திங்களென்னும் *
பால்விண்சுரவி சுரமுதிர்மாலை * பரிதிவட்டம்
போலுஞ்சுடரடலாழிப்பிரான் பொழிலேழளிக்கும்
சால்பின்தகைமைகொலாம்? * தமியாட்டி தளர்ந்ததுவே.
2550 vāl vĕṇ nilavu * ulaku ārac curakkum vĕṇ tiṅkal̤ ĕṉṉum *
pālviṇ curavi * cura mutir mālai ** pariti vaṭṭam
polum cuṭar aṭal āzhip pirāṉ pŏzhil ezh al̤ikkum *
cālpiṉ takaimaikŏlām * tamiyāṭṭi tal̤arntatuve?73

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2550. Her friend says, “The white moon shines with milk-like rays in the sky in the evening. She suffers alone and her beloved, the lord with the heroic discus, the protector of all the seven worlds, has not come to give his grace. How could he not give his grace to her?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வெண் வெண்மையான; திங்கள் என்னும் சந்திரன் என்னும்; விண் சுரவி ஆகாசத்திலிருக்கும் பசுவானது; வால் வெண் மிகவும் வெளுத்த; நிலவு பால் நிலவு என்னும் பாலை; உலகு ஆர உலகமெல்லாம் பரவ; சுரக்கும் சுரக்கும்; சுர முதிர் சுரந்து கொட்டும்; மாலை மாலைப் பொழுதில்; தமியாட்டி தனிமையில்; தளர்ந்ததுவே வருந்தும் இப்பெண்; பரிதி வட்டம் சூரியமண்டலத்தை; போலும் போன்ற; சுடர் அடல் ஒளியுடைய; ஆழிப் பிரான் சக்கரத்தையுடையவன்; ஏழ் பொழில் அளிக்கும் சப்த லோகங்களையும்; சால்பின் காப்பவன்; தகைமைகொலாம் இவளை விட்டுவிடுவானோ?
veṇ thingal̤ enṛum being referred to as the whitish moon; viṇ moving in the sky; suravi cow; vāl veṇ being very whitish; nilavu moon; pāl milk; ulagu world, considered as the (receptor) vessel; āra to be full; surakkum secreting; sura secretion; mudhir matured; mālai night time; thamiyātti this girl, without any support; thal̤arndhadhu has crumbled; paraidhivattam pŏlum looking like the sun’s halo; sudar having radiance; adal battle-ready; āzhi one who has the divine disc; pirān sarvĕṣvaran, who is the benefactor; ĕzh pozhil the seven worlds; al̤ikkum protection; sālbin the eminence of protection; thagaimai kolām is it the true nature?