TVT 72

இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறை கண்டு வருந்தல்

2549 சூழ்கின்றகங்குல் சுருங்காவிருளின்கருந்திணிம்பை *
போழ்கின்ற திங்களம்பிள்ளையும்போழ்க * துழாய்மலர்க்கே
தாழ்கின்றநெஞ்சத்தொருதமியாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்றவாறு இதுவோ? * வந்துதோன்றிற்றுவாலியதே.
2549 cūzhkiṉṟa kaṅkul * curuṅkā irul̤iṉ karun tiṇimpai *
pozhkiṉṟa tiṅkal̤ am pil̤l̤aiyum pozhka ** tuzhāy malarkke
tāzhkiṉṟa nĕñcattu ŏru tamiyāṭṭiyeṉ māmaikku iṉṟu *
vāzhkiṉṟa āṟu ituvo * vantu toṉṟiṟṟu vāliyate?72

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2549. She says, “The crescent moon that splits the darkness surrounding the world increases the pain of my love. I am alone and my heart grows weak longing for his thulasi garland. The pale color of my body increases. How can I survive with this bright moon?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சூழ்கின்ற கங்குல் வியாபித்திருக்கும் இரவும்; சுருங்கா இருளின் சுருக்கமற்ற இரவுமான; கரும் கறுத்த; திணிம்பை அந்தகாரத்தினுடைய வலிமையை; போழ்கின்ற பிளக்க; அம் பிள்ளையும் அழகிய பிள்ளை போன்ற; வாலியதே திங்கள் வலியதான சந்திரன்; வந்து போழ்க வந்து உதித்தது; துழாய் மலர்க்கே பெருமானின் துளசி மாலைக்கு; தாழ்கின்ற நெஞ்சத்து ஆசைப்படும் மனதையுடைய; ஒரு ஒரு துணையுமில்லாமல்; தமியாட்டியேன் தனியாக இருக்கும் என்னுடைய; மாமைக்கு இன்று இயற்கையான நிறத்திற்கு; வாழ்கின்ற வாழ்க்கை அளிக்க; ஆறு தோன்றிற்று வந்து தோன்றியதோ?; இதுவோ இந்த சந்திரன்
sūzhginṛa pervading everywhere; kangul caused by the night; surungā not contracted (huge); karu being black; irul̤ darkness’; thiṇimbai strength; pŏzhginṛa splitting; am being beautiful; pil̤l̤ai favourable like a son; thingal̤um chandhiran too; pŏzhga let him split; vāliyadhu strong; vandhu thŏnṛiṝu it rose up (in the sky); thuzhāy malarkkĕ only for the divine garland of thul̤asi (worn by sarvĕṣvaran); thāzhginṛa languishing; nenjaththu having heart; oru thamiyāttiyĕn ī, who am lonely, without anyone to assist; my; māmaikku natural complexion; inṛu during this time; vāzhginṛa āṛu the way ī live; idhuvŏ is it like this?