TVT 61

பாங்கி தலைவனது சீலத்தைத் தலைவிக்குக் கூறுதல்

2538 வாசகஞ்செய்வதுநம்பரமே? * தொல்லைவானவர்தம்
நாயகன் நாயகரெல்லாம்தொழுமவன் * ஞாலமுற்றும்
வேயகமாயினும்சோராவகை இரண்டேயடியால்
தாயவன் * ஆய்க்குலமாய்வந்து தோன்றிற்று நம்மிறையே.
2538 vācakam cĕyvatu namparame * tŏllai vāṉavar tam
nāyakaṉ * nāyakar ĕllām tŏzhum avaṉ ** ñālam muṟṟum
vey akam āyiṉum corāvakai * iraṇṭe aṭiyāl
tāyavaṉ * āyk kulamāy vantu toṉṟiṟṟu nam iṟaiye?61

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2538. Her friend says, “O friend, how can we praise his might? He is the highest and most ancient god of the gods in the sky and all in the sky worship him. He measured the whole earth and the sky with his two feet without growing tired, yet he came to the cowherd village and was born as a baby there. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொல்லை பழமையான; வானவர்தம் நித்ய ஸூரிகளுக்கு; நாயகன் தலைவனும்; நாயகர் எல்லாம் பிரமன் முதலியோரால்; தொழும் அவன் தொழப்படுபவனும்; ஞாலம் முற்றும் உலகம் முழுவதையும்; வேய் மூங்கில் குத்தளவு; அகம் ஆயினும் இடமாகிலும்; சோராவகை விடாதபடி; இரண்டே அடியால் இரண்டே அடியால்; தாயவன் அளந்தவனும்; நம் இறையே நமக்கு ஸ்வாமியுமான பெருமான்; ஆய்க் குலமாய் வந்து ஆயர் குலத்தில் வந்து; தோன்றிற்று அவதரித்த எளிமையை; வாசகம் செய்வது எடுத்துப் புகழ்ந்து கூறுவது; நம் பரமே நம்மாலாகக் கடவதோ?
thollai vānavar tham for nithyasūris who have been present from time immemorial; nāyagan as the lord; nāyagar ellām all entities such as brahmā et al; thozhumavan being worshipped; gyālam muṝum entire world; vĕy agam āyinum sufficient space for planting bamboo pole; sŏrā vagai not leaving [even that]; iraṇdĕ adiyāl with only two steps; thāyavan one who measured; nam iṛai ṣriya:pathim (consort of ṣrī mahālakshmi), being our lord; āykkulamāy in the clan of herdsfolk; vandhu thŏnṛiṝu that he came and incarnated; vāsagam seyvadhu to narrate it; nam paramĕ is it possible for us?