TVT 56

தலைவன் இரவிடைத் தன்னைக் கலந்தமையைத் தலைவி தோழிக்குரைத்தல்

2533 வியலிடமுண்டபிரானார் விடுத்ததிருவருளால் *
உயலிடம்பெற்றுய்ந்தம் அஞ்சலம்தோழி! * ஓர்தண் தென்றல்வந்து
அயலிடையாருமறிந்திலர் அம்பூந்துழாயினின்தேன்
புயலுடைநீர்மையினால் * தடவிற்றுஎன் புலன்கலனே.
2533 viyaliṭam uṇṭa pirāṉār * viṭutta tiruvarul̤āl *
uyal iṭam pĕṟṟu uyntam añcalam tozhi ** or taṇ tĕṉṟal vantu
ayaliṭai yārum aṟintilar am pūn tuzhāyiṉ iṉ teṉ *
puyaluṭai nīrmaiyiṉāl * taṭaviṟṟu ĕṉ pulaṉ kalaṉe56

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2533. She says, “O friend! Through the divine grace of him who swallowed the whole earth and spit it out we have a place to live. We are not afraid of anything. The cool breeze brings honey from his beautiful thulasi garland and sprinkles it on my body and my ornaments. No one around me knows this. I am happy. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வியலிடம் உண்ட ஆச்சர்யமான பூமியை உண்ட; பிரானார் எம்பெருமான்; விடுத்த என்னிடம் தெரிவித்த; திரு அருளால் அருளால்; உயல் இடம் பெற்று உய்யும் வழி பெற்று; உய்ந்தம் வாழ்ந்தோம் இனி வாடைக் காற்றுக்கு; அஞ்சலம் பயப்படமாட்டோம்; தோழி! தோழியே!; ஓர் தண் ஒரு குளிர்ந்த; தென்றல் தென்றல் காற்று; வந்து அருகில் வந்து; அயலிடை யாரும் எவரும்; அறிந்திலர் அறியாதபடி; அம் பூ அழகிய பூக்களையுடைய; துழாயின் திருத்துழாயின்; இன் தேன் இனிய தேன் துளிகளை; புயலுடை மழை துளித்தல் போல; நீர்மையினால் துளிக்கும் தன்மை உடையதாய்; என் புலன் என்னுடைய இந்திரியங்களிலும்; கலனே ஆபரணங்களிலும்; தடவிற்று ஸ்பர்சித்தது
am beautiful; thŏzhi ŏh friend!; viyal amaśing; idam earth; uṇda one who ate; pirānār sarvĕṣvaran, the benefactor; viduththa gave; thiru praiseworthy; arul̤āl due to mercy; uyal for being uplifted; idam peṝu getting an opportunity; uyndham we got our lives back; anjal do not fear; ŏr being unique; thaṇ cool; thenṛal southern wind; vandhu coming and blowing gently; am beautiful; having flowers; thuzhāyin available in divine thul̤asi; in enjoyable; thĕn honey; puyaludai cloud’s; nīrmaiyināl due to its nature; en my; pulan senses; kalan ornaments; thadaviṝu touched; ayalidai yārum none in the vicinity; aṛindhilar knew (it)