TVT 30

தலைவி அன்னம் வண்டானங்களையும் தூது வேண்டுதல்

2507 அன்னஞ்செல்வீரும் வண்டானஞ்செல்வீரும் தொழுதிரந்தேன் *
முன்னஞ்செல்வீர்கள் மறவேன்மினோ * கண்ணன் வைகுந்தனோடு
என்னெஞ்சினாரைக்கண்டால்என்னைச்சொல்லி அவரிடைநீர்
இன்னஞ்செல்லீரோ? * இதுவோதகவென்றிசை மின்களே!
2507 aṉṉam cĕlvīrum vaṇṭāṉam cĕlvīrum tŏzhutu iranteṉ *
muṉṉam cĕlvīrkal̤ * maṟavelmiṉo ** kaṇṇaṉ vaikuntaṉoṭu
ĕṉ nĕñciṉāraik kaṇṭāl ĕṉṉaic cŏlli * avariṭai nīr
iṉṉam cĕllīro? * ituvo takavu? ĕṉṟu icaimiṉkal̤e30

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2507. She says, “O swans and bees, I bow to you and ask you to take my message to him. Tell me, won’t you go to him? I won’t forget your help. If you see other women Kannan loves in Vaikundam tell them also about me. Understand that helping me is the right thing for you to do. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னம் அன்னங்களாக; செல்வீரும் செல்பவர்களையும்; வண்டானம் குருகுகளாகச்; செல்வீரும் செல்பவர்களையும்; தொழுது நான் வணங்கி; இரந்தேன் பிரார்த்தித்தேன்; முன்னம் உங்களுள் முன்னே; செல்வீர்கள் செல்பவர்கள் என் வேண்டுகோளை; மறவேன் மினோ மறவாமல் கூறுங்கள்; வைகுந்தனோடு வைகுந்தத்துக்குத் தலைவனான; கண்ணன் கண்ணனோடு; என் நெஞ்சினாரை என் நெஞ்சை அங்கு நீங்கள்; கண்டால் பார்த்தீர்களானால்; என்னைச் சொல்லி என்னைக் குறிப்பிட்டுச் சொல்லி; அவரிடை நீர் அவரிடம் நீர்; இன்னம் இன்னமும்; செல்லீரோ? போய்ச்சேராதிருக்கிறீரோ?; இதுவோ தகவு? என்று இது தகுமோ? என்று; இசைமின்களே கேளுங்கள்
annam selveerum those who are going [as my messengers] as swans; vaṇdānam selveerum those who are going as storks; thozhudhu seeking refuge; irandhĕn ī beseeched; munnam ahead; selveergal̤ those who are going; maṛavĕlminŏ keep (in your mind) without forgetting; kaṇṇan being simple; vaigundhanŏdu with sarvĕṣvaran who is residing in paramapadham (ṣrīvaikuṇtam); en nenjinārai my mind; kaṇdāl if you see; ennai me (who has reached this state); solli inform about; avaridai with that mind; innnam further; selleerŏ will you not go?; idhuvŏ thagavu is this (your) nature?; enṛu isaimingal̤ please say