TVT 3

பிரிவாற்றாத தலைவி நெஞ்சழிந்து கூறுதல்

2480 குழல்கோவலர் மடப்பாவையும் மண்மகளும் * திருவும்
நிழற்போல்வனர்கண்டு நிற்குங்கொல்? மீளுங்கொல்? * தண்ணந்துழாய்
அழல்போலடும்சக்கரத்தண்ணல் விண்ணோர்தொழக் கடவும்
தழற்போல்சினத்த * அப்புள்ளின்பின்போனதனி நெஞ்சமே.
2480 kuzhal kovalar maṭap pāvaiyum * maṇmakal̤um * tiruvum
nizhalpolvaṉar kaṇṭu * niṟkumkŏl mīl̤umkŏl ** taṇ am tuzhāy
azhal pol aṭum cakkarattu aṇṇal viṇṇor tŏzhak kaṭavum *
tazhal pol ciṉatta * ap pul̤l̤iṉ piṉ poṉa taṉi nĕñcame?3

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2480. She says, “Worshiped by the gods, he wears a thulasi garland and my lovely heart goes behind him as he rides on the angry Garudā, carrying a fire-like discus that destroys his enemies. Nappinnai, the beautiful daughter of the cowherds who play the flute, the earth goddess and Lakshmi are with him like his shadow. Will my heart stay there looking at his beloved wives or will it return?”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தண் அம் குளிர்ந்த அழகிய; துழாய் துளசிமலையை உடையவனும்; அழல் போல் அடும் நெருப்பு போல் அழிக்கின்ற; சக்கரத்து சக்கரத்தை உடையவனுமான; அண்ணல் எம்பெருமான்; விண்ணோர் நித்யஸூரிகள்; தொழ கடவும் வணங்கும்படி; தழல் போல் நெருப்புப் போன்ற; சினத்த கோபமுடையவனான; அப் புள்ளின் அக்கருடனின்; பின் மீது ஏறிச்செல்லும்போது; போன தனி அவன் பின் தனியாகப்போன; நெஞ்சமே! என் மனம்; குழல் கோவலர் புல்லாங்குழலையுடய கண்ணன்; மடப் பாவையும் ஆயர்குல நப்பின்னையும்; மண்மகளும் திருவும் பூதேவியும் ஸ்ரீதேவியும்; நிழல் போல்வனர் நிழல் போல் இருக்க அவர்களை; கண்டு கண்டு வணங்கி; நிற்கும்கொல் அங்கேயே நின்றுவிடுமோ?; மீளும்கொல் அல்லது திரும்பி வருமோ?
thaṇ being cool; am being beautiful; thuzhāy divine thul̤asi; azhal pŏl like hot; adum roasting; chakkaram having sudharṣana disc in his hand; aṇṇal sarvĕṣvaran, who is the lord; viṇṇŏr nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); thozha to be worshipped; kadavum conducting; thazhal pŏl like fire; sinaththa having anger; appul̤l̤in behind that garuthmān (garuda); pin following; pŏna one who followed; thani without any support; nenjam mind; kuzhal having locks; kŏvalar born in cow-herd clan; madam being obedient; pāvaiyum nappinnai pirātti (neel̤ā dhĕvi); maṇmagal̤um ṣrī bhūmi pirātti; thiruvum and periya pirātti (ṣrī mahālakshmi); nizhal pŏlvanar being like shadow (to followers) (and invigorating); kaṇdu after seeing them; niṛkungol will it stay there itself?; meel̤ungol will it return?