TVT 21

விடை தழுவிவந்த தலைவனை வியத்தல். ஏறுகோள் கூறி வரைவு கடாதல் என்னலுமாம்

2498 சூட்டுநன்மாலைகள் தூயனவேந்தி * விண்ணோர்கள்நன்னீர்
ஆட்டி அந்தூபம்தராநிற்கவேயங்கு * ஓர்மாயையினால்
ஈட்டியவெண்ணைதொடுவுண்ணப் போந்திமிலேற்று வன்கூன்
கோட்டிடையாடினைகூத்து * அடலாயர்தம்கொம்பினுக்கே.
2498 cūṭṭu nal mālaikal̤ * tūyaṉa enti * viṇṇorkal̤ nal nīr
āṭṭi am tūpam tarāniṟkave aṅku ** or māyaiyiṉāl
īṭṭiya vĕṇṇĕy tŏṭu uṇṇap pontu imil eṟṟu vaṉ kūṉ *
koṭṭiṭai āṭiṉai kūttu * aṭal āyar tam kŏmpiṉukke21

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Reference Scriptures

BG. 9-26

Simple Translation

2498. Her friend says, “The gods in the sky bathe you in pure water, adorn you with beautiful garlands and burn incense to you and worship you. You stole the butter in the cowherd village and ate it, and you fought the seven bulls with bent horns to marry Nappinnai, the daughter of the cowherd and you danced the kudakkuthu dance. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அங்கு அந்த பரமபதத்தில்; தூயன பரிசுத்தமான; சூட்டு சூட்டத்தக்க; நல் மாலைகள் அழகிய மாலைகளை; ஏந்தி கைகளில் ஏந்தி; விண்ணோர்கள் நித்யஸூரிகள்; நல் நீர் ஆட்டி நன்றாகத் திருமஞ்சனம் செய்து; அம் தூபம் அழகிய தூப தீபங்கள்; தராநிற்கவே ஸமர்ப்பிக்கச் செய்தே; ஓர் மாயையினால் உன் ஒப்பற்ற மாயையினால்; ஈட்டிய கடைந்து சேர்ந்த; வெண்ணெய் வெண்ணெயை; தொடு உண்ண களவு செய்து உண்ண; போந்து வந்தபோது; அடல் ஆயர் தம் ஆயர்குலத்தில் பிறந்த; கொம்பினுக்கே நப்பின்னையை மணக்க; இமில் ஏற்று முசுப்பை உடைய எருதுகளின்; வன் கூன் வலிய வளைந்த; கோட்டிடை கொம்புகளின் நடுவிலே; கூத்து ஆடினை நர்த்தனம் செய்தாய்!
angu in that nithya vibhūthi (spiritual realm); thūyana being sacred; sūttu apt to be adorned as an ornament on the divine crown; nal distinguished; mālaigal̤ garlands; ĕndhi holding them; viṇṇŏrgal̤ nithyasūris (permanent dwellers of nithyavibhūthi); nal sacred; nīr with water; ātti giving a divine bath; am beautiful; dhūbam fragrant smoke; tharāniṛkavĕ even as they were offering; ŏr unique; māyaiyināl with his solemn vow; īttiya gathered; veṇṇey butter; thodu stealing; uṇṇa to eat; pŏndhu mercifully reached; imil very strong; ĕṛu bulls’; val powerful; kūn curved; kŏdu horns’; idai in-between; adal strong; āyar tham the cowherd boys’; kombinukku for nappinnai pirātti; kūththādinai you had danced