TVT 14

நலம் பாராட்டல்

2491 ஈர்வனவேலுமஞ்சேலும் * உயிர்மேல்மிளிர்ந்திவையோ
பேர்வனவோவல்ல தெய்வநல்வேள்கணை * பேரொளியே
சோர்வனநீலச்சுடர்விடும்மேனியம்மான் விசும்பூர்
தேர்வன * தெய்வமன்னீரகண்ணோ? இச்செழுங்கயலே.
2491 īrvaṉa velum am celum * uyirmel mil̤irntu ivaiyo *
pervaṉavo alla * tĕyva nal vel̤ kaṇaip ** per ŏl̤iye
corvaṉa nīlac cuṭar viṭu meṉi ammāṉ * vicumpu ūr
tervaṉa * tĕyvam aṉṉīra kaṇṇo ic cĕzhuṅ kayale?14

Ragam

Thalam

Bhavam

Nāyaki (lovelorn lady)

Simple Translation

2491. He says, “Her beautiful fish-shaped eyes that are sharp like spears have taken over my life. The bright light of Kama’s divine arrows will not leave me. They target my life. She is like the divine heaven of the shining dark-colored god. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஈர்வன வேலும் கூர்மையான வேல்கள் போலவும்; அம் சேலும் அழகிய சேல்மீன்கள் போலவும் உள்ள; இவை அவளுடைய கண்கள்; உயிர் மேல் மிளிர்ந்து உயிர் மேல் பாய்ந்து; பேர்வனவோ அல்ல மீளுகின்றன அல்லவே; தெய்வ தெய்வத் தன்மையையுடைய; நல் வேள் அழகிய மன்மதனுடைய; கணை அம்புகளின்; பேர் ஒளியே சிறந்த ஒளியையே; சோர்வன வெளியிடுகின்றன; நீலச் சுடர் விடும் நீலமணியின் ஒளியை வீசும்; மேனி திருமேனியையுடையவனான; அம்மான் எம்பெருமானின்; ஊர் பரமபதத்திலிருக்கும் நித்யசூரிகளை; தேர்வன தேடுகின்றன; தெய்வம் அன்னீர அப்ராக்ருதமான; கண்ணோ தெய்வத்தை ஒத்த உமது கண்கள்; இச் செழுங்கயலே? கொழுத்த கயல் மீன்களோ?
īrvana splitting; vĕlum as the weapon spear; am beautiful; sĕlum as the fish; ivai these; uyir mĕl on the life; mil̤irndhu attacking; pĕrvanavŏ alla they will not go away; dheyvam as the lord; nal being distinguished; vĕl̤ manmatha’s (cupid‘s); kaṇai arrow of red lotus; pĕr huge; ol̤i lustre; sŏrvana letting out; neelam dark; sudar splendorous; vidum emitting; mĕni divine form; ammān sarvĕṣvaran, the l̤ord’s; visumbu ṣrīvaikuṇtam; ūr nithyasūris who are present in that place; thĕrvana are searching; dheyvam different from prākrutham (primordial); annīra distinguished like that; i this; sezhum well rounded; kayal fish; kaṇṇŏ eyes?