TVT 1

எம்பெருமானே! என் விண்ணப்பம் கேட்டருள்

2478 பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்குமழுக் குடம்பும் *
இந்நின்றநீர்மைஇனியாமுறாமை * உயிரளிப்பான்
எந்நின்றயோனியுமாய்ப்பிறந்தாய்! இமையோர்தலைவா!
மெய்நின்றுகேட்டருளாய் * அடியேன்செய்யும் விண்ணப்பமே. (2)
2478 ## pŏyn niṉṟa ñāṉamum * pŏllā ŏzhukkum azhukku uṭampum *
in niṉṟa nīrmai * iṉi yām uṟāmai **
uyir al̤ippāṉ ĕn niṉṟa yoṉiyumāyp piṟantāy * imaiyor talaivā! *
mĕyn niṉṟu keṭṭarul̤āy * aṭiyeṉ cĕyyum viṇṇappame1

Ragam

Thalam

Bhavam

Self

Reference Scriptures

BG. 10-9

Simple Translation

2478. The poet says, “O lord, for the sake of protecting all souls, you took birth in several wombs!, chief of the gods in the sky, hear the request of your devotee. Remove my false knowledge, bad behavior, and unclean body and give me your grace so that I, born from my mother’s womb, will not be born in this world again. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உயிர் எல்லா உயிரினங்களையும்; அளிப்பான் காப்பாற்றுவதற்காக; எந் நின்ற பலவகைப்பட்ட; யோனியுமாய் பிறவிகளில்; பிறந்தாய்! அவதரித்தவனே!; இமையோர் தேவர்களுக்கு; தலைவா! தலைவனே!; பொய்ந் நின்ற பொய்யே நிலைபெற்ற; ஞானமும் அறிவும்; பொல்லா ஒழுக்கும் தீய நடத்தையும்; அழுக்கு உடம்பும் அழுக்கு உடம்பையும் கொண்டு; இன் நின்ற நீர்மை பிறவித்துன்பத்தை அடைந்துள்ளோம்; இனி இனிமேல் இவ்வித துன்பத்தை; யாம் உறாமை நாங்கள் அடையாதபடி; அடியேன் செய்யும் அடியேனான நான் செய்யும் இந்த; மெய் விண்ணப்பமே உண்மையான விண்ணப்பத்தை; நின்று கேட்டருளாய் நின்று கேட்டருள வேண்டும்
uyir all the created entities; al̤ippān to protect; enninṛa many different types; yŏniyumāy births; piṛandhāy ŏh one who incarnated!; imaiyŏr for nithyasūris (permanent dwellers of ṣrīvaikuṇtam); thalaivā ŏh one who is the l̤ord!; poynninṛa not being truthful; gyānamum knowledge; pollā ozhukkum bad conduct; azhukku deficient; udambum body; inninṛa of this nature; nīrmai quality; ini from now onwards; yām we; uṛāmai such that we do not attain; adiyĕn ī, who am your servitor; seyyum make; mey reality; viṇṇappam appeal; ninṛu remaining firm; kĕttarul̤āy please listen to, mercifully