ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் /
śrī Āṇḍāl taṉiyaṉkal̤
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! * தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய்! * நாடி நீ
வேங்கடவற்கு கென்னை விதியென்றவிம்மாற்றம் *
நாம்கடவா வண்ணமே நல்கு
cūṭikkŏṭutta cuṭarkkŏṭiye! * tŏlpāvai
pāṭi arul̤avalla palval̤aiyāy! * nāṭi nī
veṅkaṭavaṟku kĕṉṉai vitiyĕṉṟavimmāṟṟam *
nāmkaṭavā vaṇṇame nalku
உய்யக்கொண்டார் / uyyakkŏṇṭār
Word by word meaning
பாவை — நோன்பை; சூடி — பூமாலையை சூடி; கொடுத்த — பெரிய பெருமாளுக்கு ஸமர்ப்பித்த; சுடர் கொடியே — பொற்கொடி போன்ற வடிவழகை உடையவளே!; தொல் — பழமையான; பாடி — திருப்பாவை என்னும் திவ்ய பிரபந்தத்தால் பாடி; அருளவல்ல — உபகரிக்க வல்லவளாய்; பல் வளையாய் — பலவகை வளையல்களை அணிந்தவளே; நீ நாடி — மன் மதனான நீ ஆராய்ந்து; வேங்கடவர்க்கு — திருவேங்கடவர்க்கு; என்னை — வாழ்க்கைப் படுத்தவேண்டும் என்று ஆசைபடுகிற என்னை; விதி — அந்தரங்க கைங்கர்யம் பண்ணும்படி விதிக்க வேண்டும்; என்ற நாடி நீ — என்று நீ அருளிச்செய்த; இ மாற்றம் — இந்த பாசுரத்தை; நாம் — உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள்; கடவாவண்ணம் — மீராததபடி; நல்கு — அருள வேண்டும்