திருவெழுகூற்றிருக்கை தனியன்கள் / Thiruvezukuṛṛirukkai taṉiyaṉkal̤

சீரார் திருவெழுகூற்றிருக்கை யென்னுஞ் செந்தமிழால் *
ஆராவமுதன் குடந்தைப் பிரான் தனடியிணைக்கீழ் *
ஏரார் மறைப் பொருளெல்லா மெடுத்திவ்வுல குய்யவே *
சேராமற் சொன்ன அருண் மாரி பாதம் துணை நமக்கே

cīrār tiruvĕḻukūṟṟirukkai yĕṉṉuñ cĕntamiḻāl *
ārāvamutaṉ kuṭantaip pirāṉ taṉaṭiyiṇaikkīḻ *
erār maṟaip pŏrul̤ĕllā mĕṭuttivvula kuyyave *
cerāmaṟ cŏṉṉa aruṇ māri pātam tuṇai namakke
எம்பெருமானார் / ĕmpĕrumāṉār

Word by word meaning

சீரார் சிறந்த; திருவெழு கூற்றிருக்கை திருவெழு கூற்றிருக்கை; என்னும் என்னும்; செந்தமிழால் செந்தமிழ் நூலால்; ஆராவமுதன் ஆராவமுதன் என்னும்; குடந்தைப் பிரான் திருக்குடந்தைப் பெருமானுடைய; தன் அடியிணைக்கீழ் திருவடிகளைப் பற்றி; ஏரார் மறை வேதப் பொருள்களுடன்; பொருளெல்லாம்எல்லாம் பல அர்த்தங்களை; எடுத்து விளங்க வைத்து; இவ்வுலகு இவ்வுலகம்; உய்யவே உய்வு பெற; அருள்மாரி அருள் மழைபோன்ற உபதேசங்களை; சோராமற் சொன்ன ஒன்றுவிடாமல் கூறிய; பாதம் திருமங்கை ஆழ்வாருடைய திருவடிகளே; துணை நமக்கே நமக்குத் துணை ஆகும்