திருச்சந்தவிருத்த தனியன்கள் / Thiruchanda Virutham taṉiyaṉkal̤

உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து * தம்மில்
புலவர் புகழ்க்கோலால் தூக்க * - உலகுதன்னை
வைத்தெடுத்த பக்கத்தும் * மாநீர் மழிசையே
வைத் தெடுத்த பக்கம் வலிது

ulakum maḻicaiyum ul̤l̤uṇarntu * tammil
pulavar pukaḻkkolāl tūkka * - ulakutaṉṉai
vaittĕṭutta pakkattum * mānīr maḻicaiye
vait tĕṭutta pakkam valitu
திருக்கச்சி நம்பிகள் / tirukkacci nampikal̤

Word by word meaning

புலவர் வேதம் அறிந்த ரிஷிகள்; உலகும் திருமழிசை தவிர மற்ற எல்லா உலகங்களையும்; மழிசையும் திருமழிசையையும்; தம்மில் தனித்தனியே; உள் உணர்ந்து தம் மனதில் ஆராய்ந்து; புகழ்க்கோலால் புகழை அளக்கும் துலாக்கோலை; தூக்க நாட்டி நிறுக்க; உலகு தன்னை உலகங்களை எல்லாம்; வைத்து எடுத்த வைத்து நிறுத்தப்பட்ட; பக்கத்தும் தட்டைக்காட்டிலும்; மாநீர் சிறந்த நீர்வளம் மிக்க; மழிசையே திருமழிசையை; வைத்தெடுத்த வைத்து நிறுத்தப்பட்ட; பக்கம் வலிது தட்டே வலிமை மிக்கதாய் இருந்தது