TCV 98

மறந்திடாது எனக்கு அருளவேண்டும்

849 மறம்துறந்துவஞ்சமாற்றி ஐம்புலன்களாசையும்
துறந்து * நின்கணாசையே தொடர்ந்துநின்றநாயினேன் *
பிறந்திறந்துபேரிடர்ச் சுழிக்கணின்றுநீங்குமா *
மறந்திடாதுமற்றெனெக்கு மாய! நல்கவேண்டுமே.
849 maṟam tuṟantu vañcam māṟṟi * aimpulaṉkal̤ ācaiyum
tuṟantu * niṉkaṇ ācaiye * tŏṭarntu niṉṟa nāyiṉeṉ **
piṟantu iṟantu per iṭarc * cuzhikkaṇiṉṟu nīṅkumā *
maṟantiṭātu maṟṟu ĕṉakku * māya nalka veṇṭume (98)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

849. I have left all the evil acts that I was committing and now I have no cunning or fault, none of the desires that the five senses bring. I am like a dog and my only desire is to be with you. O Māyan, give me the boon of not being born and dying anymore and I will not forget you.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாய! ஆச்சர்ய சக்தி உடையவனே!; மறம் துறந்து கோபத்தை ஒழித்து; வஞ்சம் மாற்றி வஞ்சனை தவிர்த்து; ஐம்புலன்கள் இந்த்ரியங்களினுடைய; ஆசையும் பற்றையும்; துறந்து ஒழித்து; நின் கண் உன்னிடத்தில்; ஆசையே பக்தியை; தொடர்ந்து நின்ற கொண்டு நிற்கும்; நாயினேன் அடியவனான நான்; பிறந்து இறந்து பிறப்பதும் இறப்பதுமான; பேர் இடர் இந்த துயர; சுழிக்கணின்று சக்கரத்திலிருந்து; நீங்குமா நீங்கும் பிரகாரத்தையும்; மற்று பரமாநந்தமடையும் வழியையும்; எனக்கு அடியேனுக்கு; மறந்திடாது மறந்து விடாமல்; நல்க வேண்டுமே அருளவேணும்