TCV 96

நின்கழல் பற்ற வரம்தா

847 வரம்பிலாதமாயமாய! வையமேழும்மெய்ம்மையே *
வரம்பிலூழியேத்திலும் வரம்பிலாதகீர்த்தியாய் *
வரம்பிலாதபல்பிறப்பு அறுத்துவந்துநின்கழல் *
பொருந்துமாதிருந்தநீ வரஞ்செய்புண்டரீகனே!
847 varampu ilāta māya māya * vaiyam ezhum mĕymmaiye *
varampu il ūzhi ettilum * varampu ilāta kīrttiyāy **
varampu ilāta pal piṟappu * aṟuttu vantu niṉkazhal *
pŏntumā tirunta nī * varam cĕy puṇṭarīkaṉe (96)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

847. You do endless magic. Even if all the true seven worlds were to praise you for all the seven yugas, it would not be enough, O god worthy of limitless praise. O Pundariga! Please give me a boon so I may escape from all my endless births and come to your ankleted feet.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புண்டரீகனே! தாமரைக் கண்ணனே!; வரம்பிலாத எல்லையில்லாத; மாய பிரகிருதி தத்துவத்தை உடையவனே!; மாய! ஆச்சரியமான சக்திகளையுடையவனே!; வையம் ஏழும் ஏழு உலகத்திலுமுள்ள ஜனங்களும்; மெய்ம்மையே உண்மையாகவே; வரம்பு இல் ஊழி பலபல கற்ப காலங்கள் வரையில்; ஏத்திலும் துதித்தாலும்; வரம்பு இலாத எல்லைகாணாத; கீர்த்தியாய்! புகழையுடையவனே!; வரம்பு இலாத முடிவில்லாத; பல் பிறப்பு பல பிறப்புக்களை; அறுத்து வந்து ஒழித்து வந்து; நின் கழல் உன் திருவடிகளிலே; பொருந்துமா நிலைத்திருக்கும்படி; திருந்த நீ நன்றாக நீ; வரம் செய் அருள் புரிய வேண்டும்