TCV 95

கடல்கிடந்த நியே என் தெய்வம்

846 அடக்கரும்புலன்கள்ஐந்தடக்கி ஆசையாமவை *
தொடக்கறுத்துவந்து நின்தொழிற்கணின்றஎன்னைநீ *
விடக்கருதிமெய்செயாது மிக்கொராசையாக்கிலும் *
கடற்கிடந்தநின்னலால் ஒர்கண்ணிலேன்எம்மண்ணலே.
846 aṭakku arum pulaṉkal̤ aintu aṭakki * ācaiyām avai *
tŏṭakku aṟuttu vantu * niṉ tŏzhiṟkaṇ niṉṟa ĕṉṉai nī **
viṭak karuti mĕycĕyātu * mikku ŏr ācai ākkilum *
kaṭal kiṭanta niṉ alāl * ŏr kaṇṇileṉ ĕm aṇṇale (95)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

846. I have destroyed the desires that come from the evil senses cut off all the relations I had with others, and I have come to you to serve you. Even if you want me to have desires and enjoy the pleasures of the five senses, my only desire is to be with you. I have no eyes except you, O my king who rest on the ocean.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எம்அண்ணலே! எம்பெருமானே!; அடக்கு அரும் அடக்க முடியாத; புலன்கள் ஐந்து ஐந்து இந்திரியங்களை; அடக்கி அலையாதபடி அடக்கி; ஆசையாம் அவை விஷயாந்தரப் பற்றுக்களை; தொடக்கு அறுத்துவந்து முற்றிலும் அறுத்து; நின் தொழிற்கண் உன் கைங்கரியத்திலே; நின்ற என்னை ஈடுபட்ட என்னை; நீ விடக் கருதி நீ உபேக்ஷிக்க நினைத்து; மெய்செயாது வழி நடத்துவதை முடிக்காமல்; மிக்கு ஒர் விஷயாந்தரங்களிலே; ஆசை ஆக்கிலும் ருசியைப் பிறப்பித்தாயாகிலும்; கடற்கிடந்த பாற்கடலிலே சயனித்திருக்கும்; நின் அலால் ஒர் உன்னைத்தவிர வேறு ஒருவர்; கண்ணிலேன் எனக்குக் கிடையாது