TCV 91

என்றும் என்னைவிட்டு நீங்காதே

842 பண்ணுலாவுமென்மொழிப் படைத்தடங்கணாள்பொருட்டு *
எண்ணிலாவரக்கரை நெருப்பினால்நெருக்கினாய் *
கண்ணலாலொர்கண்ணிலேன் கலந்தசுற்றம்மற்றிலேன் *
எண்ணிலாதமாய! நின்னை என்னுள்நீக்கலென்றுமே.
842 paṇ ulāvu mĕṉ mŏzhip * paṭait taṭaṅkaṇāl̤ pŏruṭṭu *
ĕṇ ilā arakkarai * nĕruppiṉāl nĕrukkiṉāy **
kaṇ alāl ŏr kaṇ ileṉ * kalanta cuṟṟam maṟṟu ileṉ *
ĕṇ ilāta māya niṉṉai * ĕṉṉul̤ nīkkal ĕṉṟume (91)

Ragam

Shankarābharaṇa / சங்கராபரண

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

842. For the sake of Sita with sharp sword-like eyes and soft words like music you burned countless Raksasas in Lankā. I have no eyes except yours that make me see and no relatives to be with except you. You have endless magic. How can I ever take you from my heart?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பண் உலாவு பலவித ராகங்களுடன் கூடிய; மென் மொழி இனிய பேச்சை உடையவளும்; படை பொருட்டு வாள் போன்று பெரிய; தடங்கணாள் கண்களையுடைய சீதைக்காக; எண் இலா கணக்கில்லாத; அரக்கரை ராக்ஷஸர்களை; நெருப்பினால் அம்பென்னும் தீயினால்; நெருக்கினாய் அழித்தாய்; கண் அலால் எனக்கு வழிகாட்டி நீதான்; ஒர் கண் இலேன் வேறு ஒரு வழிகாட்டி இல்லை; கலந்த மனதுக்கு உகந்த; சுற்றம் மற்று இலேன் ஒரு உறவும் இல்லை; எண் இலாத எண்ணிக்கையில் அடங்காத; மாய! மாயசக்தியை உடையவனே!; நின்னை என்னுள் உன்னை என்னிடமிருந்து; நீக்கல் என்றுமே என்றுமே நீக்காதிருப்பாய்