TCV 89

பாண்டவர்க்கு உதவிய தெய்வம்

840 பார்மிகுத்தபாரம் முன்ஒழிச்சுவான், அருச்சுனன் *
தேர்மிகுத்துமாயமாக்கி நின்றுகொன்று, வென்றிசேர் *
மாரதர்க்குவான்கொடுத்து வையமைவர்பாலதாம் *
சீர்மிகுத்தநின்னலால் ஒர்தெய்வம்நான்மதிப்பனே?
840 pār mikutta pāram muṉ * ŏzhiccuvāṉ aruccuṉaṉ *
ter mikuttu māyam ākki * niṉṟu kŏṉṟu vĕṉṟicer **
māratarkku vāṉ kŏṭuttu * vaiyam aivar pālatām *
cīr mikutta niṉ alāl ŏr * tĕyvam nāṉ matippaṉe? (89)

Ragam

Surutti / சுருட்டி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

840. You became the charioteer for Arjunā, destroyed the Kauravās and gave the land to the five Pāndavās, sending their enemies to the sky and saving the earth from evil ones. O victorious one, I will not worship any other except you. .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் தானே முன்னின்று; பார் மிகுத்த பாரம் மிகுந்த பூபாரத்தை; ஒழிச்சுவான் ஒழிப்பதற்காக; அருச்சுனன் அருச்சுனனுடைய; தேர் மிகுத்து தேரை ஓட்டி; மாயம் ஆக்கி பல மாயங்கள் செய்து; நின்று சாரதியாய் நின்று; கொன்று எதிரிகளைக் கொன்று; வென்றிசேர் வெற்றி வீரர்களான துர்யோதநர்களை; மாரதர்க்கு வீரஸ்வர்க்கம் அடையச்செய்து; வையம் ஐவர் உலகம் பஞ்ச பாண்டவர்கள்; பாலதாம் வசம் அடையும்படிச் செய்த; சீர் மிகுத்த புகழ் மிகுந்த; நின் அலால் உன்னைத் தவிர; ஒர் தெய்வம் மற்றொரு தெய்வம்; நான் உள்ளதாக நான்; மதிப்பனே? நினைப்பேனா?