85 -பாட்டு அவதாரிகை –
என்னை இப் பிரக்ர்தியோடே வைத்த போதே தேவரீர் நினைவு இன்னது என்று அறிகிலேன் – முந்துற முன்னம் உன் ப்ரசாதத்தாலே திருவடிகளில் பிறந்த ருசியை மாற்றி – இதர விஷய பரவணன் ஆக்காது ஒழிய வேணும் என்று பிரார்த்திக்கிறார் –
நச்சராவணைக் கிடந்த நாத பாத போதினில் வைத்த சிந்தை வாங்குவித்து நீங்குவிக்க நீயினம் **மெய்த்தன் வல்லை யாதலால் அறிந்தனன்