TCV 80

நித்ய சூரிபோகம் கிடைப்பது உறுதி

831 வாசியாகிநேசமின்றி வந்தெதிர்ந்ததேனுகன் *
நாசமாகிநாளுலப்ப நன்மைசேர்பனங்கனிக்கு
வீசி * மேல்நிமிர்ந்ததோளிலில் இல்லையாக்கினாய் * கழற்கு
ஆசையாமவர்க்கலால் அமரராகலாகுமே?
831 vāci āki necam iṉṟi * vantu ĕtirnta teṉukaṉ *
nācam āki nāl̤ ulappa * naṉmai cer paṉaṅkaṉikku **
vīci mel nimirnta tol̤iṉ * illai ākkiṉāy kazhaṟku *
ācai ām avarkku alāl * amarar ākal ākume? (80)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

831. When the Asuran Thenugam approached the lord without love pretending to be his friend, he cut off his arms but then he gave him moksa. No one can reach Mokshā except the devotees who worship the ankleted feet of the lord with love. .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாசி ஆகி கழுதையின் வடிவங்கொண்டு; நேசம் இன்றி வந்து அன்பில்லாதவனாய் வந்து; எதிர்ந்த தேனுகன் எதிர்த்த தேநுகாஸுரனை; நாசம் ஆகி அழித்து; நாள் உலப்ப ஆயுள் முடியும்படிச் செய்த; மேல் நிமிர்ந்த உயரத் தூக்கப்பட்ட; தோளின் தோளாலே; நன்மை சேர் அழகிய; பனங்கனிக்கு பனம் பழங்களின்; வீசி மேலே தூக்கியெறிந்து; இல்லை ஆக்கினாய் அவ்வசுரனை ஒழித்த; கழற்கு உம் திருவடிகளை; ஆசை ஆம் நேசிக்குவமர்களன்றி; அவர்க்கு அலால் மற்றையோர்களுக்கு; அமரர் ஆகல் பரமபதத்தை; ஆகுமே? அடைவது சாத்தியமாகுமா?