TCV 8

ஆதிமூலம் நீ தான்

759 ஆதியானவானவர்க்கும் அண்டமாயவப்புறத்து *
ஆதியானவானவர்க்கும் ஆதியானவாதிநீ *
ஆதியானவானவாணர் அந்தகாலம் நீயுரைத்தி *
ஆதியானகாலம்நின்னை யாவர்காணவல்லரே?
759 āti āṉa vāṉavarkkum * aṇṭam āya appuṟattu
āti āṉa vāṉavarkkum * āti āṉa āti nī **
āti āṉa vāṉa vāṇar * anta-kālam nī uraitti
āti āṉa kālam niṉṉai * yāvar kāṇa vallare (8)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 8-17

Simple Translation

759. You are the most ancient of the ancient gods and you abide across the worlds and you know the birth of the ancient gods. Who can tell the time when you became the first one?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆதி ஆன சிருஷ்டிக்குக் கர்த்தாக்களான; வானவர்க்கும் தேவதைகளுக்கும்; அண்டம் ஆய அண்டமென்ற பெயர் பெற்ற; அப்புறத்து அப் பரமபதத்திலுள்ள; ஆதி ஆன வானவர்க்கும் ஆதி ஆன நித்யஸூரிகளுக்கும்; ஆதியான ஆதி நீ நிர்வாஹகனான அதிபதி நீ; ஆதி ஆன உலகத்திலுள்ளவர்களுக்கும் மேலான; வான வாணர் பிரம்மா ஆகியோருக்கும்; அந்த காலம் முடிவு காலத்தை; நீ உரைத்தி நீ அருளிச்செய்தாய்; ஆதி ஆன காலம் பிரளய காலத்துக்கு; நின்னை நிர்வாஹகனான உன்னை; யாவர் காண வல்லரே? காண வல்லார் யார்?