TCV 77

எட்டெழுத்து ஓதுவோரே தேவராவர்

828 எட்டுமெட்டுமெட்டுமாய் ஒரேழுமேழுமேழுமாய் *
எட்டுமூன்றுமொன்றுமாகி நின்றஆதிதேவனை *
எட்டினாயபேதமோடு இறைஞ்சிநின்று, அவன்பெயர் *
எட்டெழுத்துமோதுவார்கள் வல்லர்வானமாளவே.
828 ĕṭṭum ĕṭṭum ĕṭṭumāy * ŏr ezhum ezhum ezhumāy *
ĕṭṭum mūṉṟum ŏṉṟum āki * niṉṟa ātitevaṉai **
ĕṭṭiṉ āya petamoṭu * iṟaiñci niṉṟu avaṉ pĕyar *
ĕṭṭu ĕzhuttum otuvārkal̤ * vallar vāṉam āl̤ave (77)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

828. The ancient lord is eight and eight and eight, he is seven and seven and seven, and he is eight and three and one. Devotees worshiping with the eight letter mantra, “Om namo Nārāyanāya, ” will go to the spiritual world and rule there.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எட்டும் எட்டும் இருபத்தினான்கு; எட்டுமாய் தத்துவங்களாய்; ஓர் ஏழும் ஒப்பற்ற ஏழு தீவுகள்; ஏழும் ஏழு மலைகள்; ஏழுமாய் ஏழு சமுத்திரங்களாய்; எட்டும் மூன்றும் பன்னிரண்டு; ஒன்றும் ஆகி ஆதித்யர்களாய்; நின்ற நிற்கும்; ஆதி தேவனை ழுமுமுதற்கடவுளை; எட்டின் ஆய பேதமோடு ஸாஷ்டாங்கமாக; இறைஞ்சி நின்று வணங்கி நின்று; அவன் பெயர் நாமங்களுக்குள்; எட்டு எழுத்தும் எட்டெழுத்தான மந்திரத்தை; ஓதுவார்கள் அநுஸந்திப்பவர்கள்; வானம் ஆளவே பரமபதத்தை; வல்லர் ஆளவல்லவர்களாவர்