TCV 73

வாலி வீழ அம்பு எய்தவன்

824 மரம்பொதச்ரந்துரந்து வாலிவீழமுன்னொர்நாள் *
உரம்பொதச்சரந்துரந்த உம்பராளியெம்பிரான் *
வரம்குறிப்பில்வைத்தவர்க்கு அலாதுவானமாளிலும் *
நிரம்புநீடுபோகம் எத்திறத்தும்யார்க்குமில்லையே.
824 maram pŏtac caram turantu * vāli vīzha muṉ ŏr nāl̤ *
uram pŏtac caram turanta * umpar-āl̤i ĕmpirāṉ **
varam kuṟippil vaittavarkku * alātu vāṉam āl̤ilum *
nirampu nīṭu pokam * ĕttiṟattum yārkkum illaiye (73)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

824. He shot his arrows and made holes in the seven mara trees. As Rāma, he shot his arrows at Vali's chest and killed him. Even the rulers of the sky will not receive the endless joy of Mokshā unless our god has given them his grace to receive it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் ஒர் நாள் முன்னொரு சமயம் திரேதாயுகத்துலே; மரம் ஏழு மராமரங்களை; பொத துளைபடும்படியாக; சரம் துரந்து அம்பைப் பிரயோகித்தும்; வாலி வீழ வாலி முடியும்படியும்; உரம் அவனது மார்பிலே; பொத ஊடுருவும்படியாக; சரந் துரந்த பாணத்தை ஏவிய; உம்பர் ஆளி தேவாதி தேவனான; எம்பிரான் எம்பெருமான்; வரம் குறிப்பில் திருவுள்ளத்தில்; வைத்தவர்க்கு அலாது இடம் பெறாதவர்; வானம் வானுலக; ஆளிலும் அதிபதிகளாயிருந்தாலும்; நிரம்பு நீடு குறைவற்ற நித்யமான; போகம் கைங்கர்ய சுகம்; யார்க்கும் யாவர்க்கும்; எத்திறத்தும் எவ்வழியாலும்; இல்லையே கிடைக்காது