TCV 72

வேதநூல் ஓதுகின்றது உண்மை

823 போதில்மங்கை பூதலக்கிழத்தி தேவி, அன்றியும் *
போதுதங்குநான்முகன்மகன் அவன்மகன்சொலில் *
மாதுதங்குகூறன் ஏறதூர்தியென்று வேதநூல் *
ஓதுகின்றதுண்மை அல்லதில்லைமற்றுரைக்கிலே
823 potil maṅkai pūtalak kizhatti * tevi aṉṟiyum *
potu taṅku nāṉmukaṉ makaṉ * avaṉ makaṉ cŏlil **
mātu taṅku kūṟaṉ * eṟatu ūrti ĕṉṟu veta nūl *
otukiṉṟatu uṇmai allatu illai * maṟṟu uraikkile (72)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

823. The goddess Lakshmi stays on a lotus, the earth goddess stays with Thirumāl, while Nānmuhan, the god’s son, sits on the lotus on his navel. The sastras say that Shivā who shares his body with his wife became his vehicle. That is the truth and no one can deny it.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
போதில் மங்கை பூமகளான லக்ஷ்மியும்; பூதல கிழத்தி பூமாதேவியும்; தேவி அன்றியும் மேலும் மற்றுமுள்ள தேவிமார்களும்; போது தங்கு பூவிலே வாசம் பண்ணும்; நான்முகன் பிரமன்; மகன் அவன் மகன்; மாது தங்கு பார்வதிக்கு பாதி உடம்பு; கூறன் கொடுத்திருக்கும்; ஏறது ரிஷபத்தை; ஊர்தி வாஹனமாக உடைய சிவன்; அவன் அந்த பிரமனின் பிள்ளை; மகன் என்று இப்படியாக; வேத நூல் சொலில் வேதங்களை ஆராய்ந்து; ஓதுகின்றது சொல்லுகிற உண்மையை; உண்மை இதுவே ஸத்யம்; மற்று இப்படியல்லாத வேறொரு அர்த்தத்தை; உரைக்கிலே சொல்லப்பார்க்கில்; அல்லது இல்லை அது அஸத்யம்