TCV 71

வாணனுக்கு இரங்கினாயே!

822 வண்டுலாவுகோதைமாதர் காரணத்தினால்வெகுண்டு *
இண்டவாணனீரைஞ்ஞூறுதோள்களைத்துணித்தநாள் *
முண்டனீறன்மக்கள்வெப்பு மோடியங்கியோடிடக் *
கண்டு * நாணிவாணனுக்கு இரங்கினானெம்மாயனே.
822 vaṇṭu ulāvu kotai mātar * kāraṇattiṉāl vĕkuṇṭu *
iṇṭa vāṇaṉ īraiññūṟu * tol̤kal̤ait tuṇitta nāl̤ **
muṇṭaṉ nīṟaṉ makkal̤ vĕppu * moṭi aṅki oṭiṭak
kaṇṭu * nāṇi vāṇaṉukku iraṅkiṉāṉ * ĕm māyaṉe (71)

Ragam

Sāveri / ஸாவேரி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

822. When Kannan took Usha, and her father Bānasuran, knowing what had happened, came to fight with him, Kannan cut off his thousand arms and Shivā, Agni and the other gods who had come to help Bānasuran retreated. Then, the Māyan forgave the Asuran and gave him Mokshā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு உலாவு வண்டுகள் உலாவப்பெற்ற; கோதை பூமாலையை அணிந்திருந்த; மாதர் தன் பெண் உஷையின்; காரணத்தினால் காரணமாக; வெகுண்டு கோபங்கொண்டு; இண்ட நெருங்கி வந்த; வாணன் பாணாசுரனுடைய; ஈரைஞ்ஞூறு தோள்களை ஆயிரந்தோள்களை; துணித்த நாள் வெட்டி வீழ்த்தியபோது; முண்டன் மொட்டைத்தலையனான; நீறன் நீறு பூசினவனான ருத்திரனும்; மக்கள் அவனுடைய குமாரர்களும்; வெப்பு அக்னி தேவதையும்; மோடி காளியும்; அங்கி ஓடிட முதுகு காட்டி ஓடினதை; கண்டு நாணி பார்த்து வெட்கமடைந்த; வாணனுக்கு பாணாசுரனுக்கு; இரங்கினான் தயை செய்தவன்; எம் மாயனே நம் கண்ணனே!