TCV 70

வாணன் தோள்களை மட்டும் துணித்தாயே!

821 குந்தமோடுசூலம்வேல்கள் தோமரங்கள்தண்டுவாள் *
பந்தமானதேவர்கள் பரந்துவானகம்முற *
வந்தவாணனீரைஞ்நூறு தோள்களைத்துணித்தநாள் *
அந்தவந்தவாகுலம் அமரரேயறிவரே.
821 kuntamoṭu cūlam velkal̤ * tomaraṅkal̤ taṇṭu vāl̤ *
pantamāṉa tevarkal̤ * parantu vāṉakam uṟa **
vanta vāṇaṉ īraiññūṟu * tol̤kal̤ait tuṇitta nāl̤
anta anta ākulam * amarare aṟivare (70)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

821. The gods in the sky, carrying clubs, tridents, spears, drums, sticks and swords, ran everywhere and hid when Bānasuran came to fight with them. On that day our Thirumāl fought with him and cut off his thousand arms, and took away all the troubles of the gods.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குந்தமோடு சூலம் ஈட்டிகள் சூலங்கள்; வேல்கள் வேலாயுதங்கள்; தோமரங்கள் உலக்கைகள்; தண்டு வாள் கதைகள் வாள்கள்; பந்தமான இவற்றுடன் கூட்டமாயிருந்த; தேவர்கள் தேவதைகள்; பரந்து நாலு திக்கிலும் ஓடி; வானகம் உற விண்ணுலகம் அடைய; வந்த போர் புரிய வந்த; வாணன் ஈரைஞ்ஞூறு பாணாஸுரனின் ஆயிரம்; தோள்களைத் தோள்களை; துணித்த நாள் வெட்டி வீழ்த்திய போது; அந்த அந்த வாயினால் சொல்லமுடியாத; ஆகுலம் துன்பங்களை அனுபவித்த ருத்திரனுடன்; அமரரே ஓடின தேவர்களே; அறிவர் அறிவார்கள்