TCV 7

முக்கண்ணனும் உன்னை உள்ளவாறு துதிக்க முடியாது

758 ஒன்றிரண்டுமூர்த்தியாய் உறக்கமோடுணர்ச்சியாய் *
ஒன்றிரண்டுகாலமாகி வேலைஞாலமாயினாய் *
ஒன்றிரண்டுதீயுமாகி ஆயனாயமாயனே! *
ஒன்றிரண்டுகண்ணினானும் உன்னையேத்தவல்லனே?
758 ŏṉṟu iraṇṭu mūrttiyāy * uṟakkamoṭu uṇarcciyāy *
ŏṉṟu iraṇṭu kālam āki * velai ñālam āyiṉāy **
ŏṉṟu iraṇṭu tīyum āki * āyaṉ āya māyaṉe *
ŏṉṟu iraṇṭu kaṇṇiṉāṉum * uṉṉai etta vallaṉe? (7)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

758. You are the Māyan, the cowherd, the three forms of the gods, Shivā, Vishnu and Nanmuhan, the sleep, the feelings of all, , the two times, night and day, and the oceans, the earth, the three fires. You are the great one praised by three-eyed Shivā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒன்று விஷ்ணுவாகவும்; இரண்டு மூர்த்தியாய் பிரம்மன் ருத்ரனாகவும் ஆகி; உறக்கமோடு அஞ்ஞானமாகிற நித்திரைக்கும்; உணர்ச்சியாய் ஞானமாகிற விழிப்புக்கும் நிர்வாஹகனாய்; ஒன்று இரண்டு ஸத்வ ரஜஸ் தமஸ் ஆகிய குணங்கள் நிறைந்த; காலம் ஆகி மூன்று காலத்துக்கும் நிர்வாஹகனாய்; வேலை ஞாலம் கடல் சூழ்ந்த பூமண்டலத்துக்கும்; ஆயினாய்! நிர்வாஹகனாய்; ஒன்று இரண்டு தீயும் ஆகி மூன்றுவித அக்னியாய்; ஆயன் ஆய ஆயர்குலத்தில் அவதரித்த; மாயனே! மாயப்பிரானே!; ஒன்று இரண்டு கண்ணினானும் முக்கண்ணனான சிவனும்; உன்னை ஏத்த வல்லனே உன்னை துதிக்க வல்லவனோ!