TCV 69

பகவானை நினைந்து பிறவித்துயர் அகற்றுங்கள்

820 காணிலும்உருப்பொலார் செவிக்கினாதகீர்த்தியார் *
பேணிலும்வரந்தரமிடுக்கிலாததேவரை *
ஆணமென்றடைந்துவாழும் ஆதர்காள்! எம்மாதிபால் *
பேணிநும்பிறப்பெனும் பிணக்கறுக்ககிற்றிரே.
820 kāṇilum urup pŏlār * cĕvikku iṉāta kīrttiyār *
peṇilum varantara * miṭukku ilāta tevarai **
āṇam ĕṉṟu aṭaintu vāzhum * ātarkāl̤ ĕm ātipāl *
peṇi num piṟappu ĕṉum * piṇakku aṟukka kiṟṟire (69)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-2, 9-26

Simple Translation

820. If you see some gods, they have terrible forms and their praise is not sweet to the ears. Even if you praise them they do not have the power to give the boons you ask for. O ignorant ones! You live thinking they are your refuge. If you want to survive, there is only one refuge for you, our Thirumāl. If you wish to release yourself from births, worship our ancient Thirumāl. .

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காணிலும் கண்ணுக்குத் தெரியும்; உருப் பொலார் உடல் ஊனங்களையும்; செவிக்கு இனாத காதுக்கு கசக்கும்; கீர்த்தியார் இகழ்ச்சியையும் உடைய; மிடுக்கு இலாத சக்தியில்லாத இப்படிப்பட்ட; தேவரை தேவதைகளை; பேணிலும் வரந்தர வரம் தர ஆச்ரயித்து; ஆணம் என்று சரணம் என்று; அடைந்து அடைந்து வாழ நினைக்கும்; ஆதர்காள்! அறிவில்லாதவர்களே; எம் ஆதிபால் முழுமுதற்கடவுளான எம்பெருமானுக்கு; பேணி நும் பணிவிடை செய்து உங்களுடைய; பிறப்பு எனும் பிறப்பு என்னும்; பிணக்கு பெரும் புதரை; அறுக்ககிற்றிரே அறுத்தொழிக்க முடியவில்லையா?