TCV 68

திருமாலை வாழ்த்தி வாழ்மின்

819 முத்திறத்துவாணியத்து இரண்டிலொன்றுநீசர்கள் *
மத்தராய்மயங்குகின்றது இட்டதிலிறந்துபோந்து *
எத்திறத்துமுய்வது ஒருபாயமில்லை உய்குறில் *
தொத்திறத்ததண்துழாய் நன்மாலைவாழ்த்திவாழ்மினோ.
819 muttiṟattu vāṇiyattu * iraṇṭil ŏṉṟum nīcarkal̤ *
mattarāy mayaṅkukiṉṟatu * iṭṭu atil iṟantu pontu **
ĕttiṟattum uyvatu or * upāyam illai uykuṟil *
tŏttu iṟutta taṇ tuzhāy * naṉ mālai vāzhtti vāzhmiṉo (68)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-21, 9-26

Simple Translation

819. When they leave this world, those base people involved in worldly pleasures like wealth will not achieve Mokshā. There is no way for them to go to the spiritual world. If you want to survive, you must praise the good god Thirumāl adorned with fresh thulasi garlands.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முத்திறத்து ஸத்வ ரஜஸ் தமோ குணங்களின்; வாணியத்து பலன்களில்; இரண்டில் ரஜஸ் தமோ குணங்களில்; ஒன்றும் விருப்பமுடைய; நீசர்கள் தாழ்ந்தவர்கள்; இட்டு அதில் அதில் ஈடுபட்டு; இறந்து போந்து இறந்தபின் மறுபடி பிறந்து; மத்தராய் தேஹமே ஆத்மா என்று; மயங்குகின்றது மயங்கி அதனால்; எத்திறத்தும் உய்வது உய்வதற்கு; ஒர் உபாயம் ஒரு உபாயம்; இல்லை இல்லை என்று நினைப்பவர்களே!; உய்குறில் உஜ்ஜீவிக்க விருப்பமிருந்தால்; தொத்து கொத்துக் கொத்தாக; இறுத்த செறிந்த; தண் துழாய் குளிர்ந்த திருத்துழாய்; நன்மாலை மாலை அணிந்தவனை; வாழ்த்தி வாழ்மினோ துதித்து வாழுங்கள்