TCV 67

உறுவினை நீங்கி வாழுங்கள்

818 சண்டமண்டலத்தினூடு சென்றுவீடுபெற்று * மேல்
கண்டுவீடிலாதகாதலின்பம் நாளுமெய்துவீர் *
புண்டரீகபாதபுண்யகீர்த்தி நுஞ்செவிமடுத்து
உண்டு * நும்முறுவினைத் துயருள்நீங்கியுய்ம்மினோ.
818 caṇṭa maṇṭalattiṉ ūṭu * cĕṉṟu vīṭu pĕṟṟu mel *
kaṇṭu vīṭu ilāta kātal * -iṉpam nāl̤um ĕytuvīr **
puṇṭarīka-pāta puṇya-kīrtti * num cĕvi maṭuttu *
uṇṭu num uṟuviṉait * tuyarul̤ nīṅki uymmiṉo (67)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

818. If you worship the lotus feet of the divine lord and listen to his praise, you will go through the world of the sun, reach Mokshā and find undiminished love and joy. The virtuous god whose feet are as beautiful as lotuses will listen to your prayers and remove your bad karmā and sorrow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சண்ட மண்டலத்தின் ஸூர்யமண்டலத்தின்; ஊடு சென்று நடுவிலே போய்; வீடு பெற்று பரமபதத்தை; மேல் கண்டு அடைந்து மேலான; வீடு இலாத பக்தியின் பயனான; காதல் கைங்கர்ய; இன்பம் ஸுகத்தை; நாளும் எய்துவீர்! பெற விரும்புபவர்களே!; புண்டரீக பாத தாமரைபோன்ற திருவடியே; புண்ய உபாயம் என்று கருதி; கீர்த்தி பகவத் விஷயத்தில்; நும் செவி உங்களுடைய காதுகளை; மடுத்து ஈடுபடுத்தி; உண்டு அநுபவித்து; நும் உங்களுடைய; உறுவினை தீவினைகளான; துயருள் துயரத்திலிருந்து; நீங்கி விடுபட்டு; உய்ம்மினோ உய்வடையுங்கள்