TCV 5

பிரமனைப் பெற்றவன் நீ தானே!

756 நின்றியங்குமொன்றலா உருக்கள் தோறும்ஆவியாய் *
ஒன்றியுள்கலந்துநின்ற நின்னதன்மையின்னதென்று *
என்றும்யார்க்குமெண்ணிறந்த ஆதியாய்! நின்னுந்திவாய் *
அன்றுநான்முகற்பயந்த ஆதிதேவனல்லையே?
756 niṉṟu iyaṅkum ŏṉṟu alā * urukkal̤ toṟum āviyāy *
ŏṉṟi ul̤ kalantu niṉṟa * niṉṉa taṉmai iṉṉatu ĕṉṟu **
ĕṉṟum yārkkum ĕṇ iṟanta * ātiyāy niṉ untivāy *
aṉṟu nāṉmukan payanta * ātitevaṉ allaiye? (5)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

756. You, the anceint one are everything on the earth, and the life of all creatures. No one knows who you are but you are in everyone and everything, there is no limit to you. You created Nanmuhan on your navel and he creates all creatures of the world.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நின்று இயங்கும் ஸ்தாவரமாய் இயங்குவதாயும்; ஒன்று அலா ஒன்றாக இல்லாமல்; உருக்கள் தோறும் பல சரீரங்கள் (ஸ்தாவர ஜங்கம) தோறும்; ஆவியாய் ஒன்றி ஆத்மாவாய்ப் பொருந்தி; உள் கலந்து நின்ற உள் கலந்து நின்ற; நின்ன தன்மை உன்னுடைய ஸ்வபாவம்; இன்னது என்று இப்படிப்பட்டதென்று; என்றும் யார்க்கும் எக்காலத்திலும் யாராலும்; எண் இறந்த சிந்திக்க முடியாத; ஆதியாய்! அன்று முதல்வனாய் அன்று; நின் உந்திவாய் உனது திருநாபியில்; நான்முகற் பயந்த பிரம்மனைப் படைத்த நீ; ஆதி தேவன் அல்லையே முழு முதற் கடவுளல்லவோ!