TCV 44

நின் தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லையே!

795 பாலினீர்மைசெம்பொனீர்மை பாசியின்பசும்புறம்
போலுநீர்மை * பொற்புடைத்தடத்து வண்டுவிண்டுலாம்
நீலநீர்மையென்றிவை நிறைந்தகாலம்நான்குமாய் *
மாலினீர்மைவையகம் மறைத்ததென்னநீர்மையே?
795 பாலின் நீர்மை செம்பொன் நீர்மை * பாசியின் பசும் புறம் *
போலும் நீர்மை பொற்பு உடைத் தடத்து * வண்டு விண்டு உலாம் **
நீல நீர்மை என்று இவை * நிறைந்த காலம் நான்குமாய் *
மாலின் நீர்மை வையகம் * மறைத்தது என்ன நீர்மையே? (44)
795 pāliṉ nīrmai cĕmpŏṉ nīrmai * pāciyiṉ pacum puṟam *
polum nīrmai pŏṟpu uṭait taṭattu * vaṇṭu viṇṭu ulām **
nīla nīrmai ĕṉṟu ivai * niṟainta kālam nāṉkumāy *
māliṉ nīrmai vaiyakam * maṟaittatu ĕṉṉa nīrmaiye? (44)

Ragam

Ārabi / ஆரபி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

795. You are the sweetness in milk, the brightness of precious gold, and the freshness of green moss. You have the dark color of bees that drink honey and fly around ponds. You are the four seasons. Why does the world not understand the grace of Thirumāl?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simplified meaning of those verse.)
பாலின் நீர்மை பாலின் வெண்மை; செம்பொன் நீர்மை சிவந்த பொன்னின் சிவப்புத்தன்மை; பாசியின் பாசியினுடைய; பசும் புறம் போலும் நீர்மை பசுமை நிறம்; பொற்புடைத் தடாகத்திலேயுள்ள; தடத்து வண்டு வண்டுகளின்; விண்டு உலாம் கருநெய்தல் பூவின்; நீல நீல நிறத்தை ஒத்த; நீர்மை கருத்த நிறம்; என்று என்கிற இந்த; இவை நான்கு நிறங்களும்; நிறைந்த நிறையப்பெற்ற; காலம் நான்குமாய் நான்கு யுகங்களிலும்; மாலின் எம்பெருமானுடைய; நீர்மை ஸௌலப்ய குணத்தை; வையகம் இவ்வுலகத்திலுள்ளவர்கள்; மறைத்தது மதிக்காதது; என்ன நீர்மையே என்ன ஸ்வபாவமோ!