TCV 4

என் ஆவியுள் புகுந்தது ஏனோ?

755 மூன்றுமுப்பதாறினோடு ஒரைந்துமைந்துமைந்துமாய் *
மூன்றுமூர்த்தியாகிமூன்று மூன்றுமூன்றுமூன்றுமாய *
தோன்றுசோதிமூன்றுமாய்த் துளக்கமில்விளக்கமாய் *
ஏன்றெனாவியுள்புகுந்த தென்கொலோ? எம்மீசனே!
755 mūṉṟu muppatu āṟiṉoṭu * or aintum aintum aintumāy *
mūṉṟu mūrtti āki mūṉṟu * mūṉṟu mūṉṟu mūṉṟumāy **
toṉṟu coti mūṉṟumāy * tul̤akkam il vil̤akkamāy *
eṉṟu ĕṉ āviyul̤ pukuntatu * ĕṉ kŏlo? ĕm īcaṉe (4)

Ragam

Yamunākalyāṇi / யமுனாகல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

755. You are the thirty-three Sanskrit sounds. You are the five consonants, and the sixteen vowels. You are the lord of the five special sounds in Tamil and the mantra with twelve sounds, “Om namo bhagavate Vāsudevāya. ” You are the three faultless lights—the sun, the moon and the stars. You have entered my heart—why, O my lord?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூன்று முப்பது ஆறினோடு 3 + 36 எழுத்துகள்; ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்தும் ஆய் 5 + 5 + 5 = 15 எழுத்துக்கள்; மூன்று ருக் யஜுர் சாம மூன்று வேதங்களில்; மூர்த்தி ஆகி சொல்லப்படுபவனாய்; மூன்று மூன்று பன்னிரண்டு எழுத்துக்களுடைய; மூன்று மூன்றுமாய் த்வாதசாக்ஷரத்துக்குப் பொருளாய்; மூன்று தோன்று மூன்று பதங்களுடைய பிரணவத்திலே; சோதியாய் விளங்கும் ஜோதியாய்; துளக்கம் இல் சலமில்லாது ஒளிவிடும்; விளக்கமாய் அகாரத்தின் பொருளாய்; எம் ஈசனே எம் ஈசனே; ஏன்று என் ஆவியுள் என்னுடைய மனதில்; புகுந்தது புகுந்து உன்னை உள்ளபடி அறிவித்தது; என் கொலோ என்ன நீர்மையோ!; முதலிரண்டு வரிகள் 54 சமஸ்கிருத எழுத்துக்கள் பின்வருமாறு: 33 மெய்யெழுத்துகள் 16 உயிர் எழுத்துகள் 5 தனி எழுத்துகள் ஹ ஷ போன்றவை. த்வாதசாக்ஷரம்: ஓம் நமோ பகவதே வாசுதேவாய - 12 எழுத்துகள். ப்ரணவம் - ஓம் என்று உச்சரிப்பது அ உ ம் ஆகிய மூன்று எழுத்துகள்.