TCV 37

பேய்ச்சி பாலையும் உண்டாயே!

788 காய்த்தநீள்விளங்கனியுதிர்த்து எதிர்ந்த பூங்குருந்து
சாய்த்து * மாபிளந்தகைத்தலத்த கண்ணனென்பரால் *
ஆய்ச்சிபாலையுண்டுமண்ணையுண்டு வெண்ணெயுண்டு * பின்
பேய்ச்சிபாலையுண்டு பண்டொரேனமாயவாமனா!
788 kāytta nīl̤ vil̤aṅkaṉi utirttu * ĕtirnta pūṅ kuruntam
cāyttu * mā pil̤anta kait talatta * kaṇṇaṉ ĕṉparāl **
āycci pālai uṇṭu maṇṇai uṇṭu * vĕṇṇĕy uṇṭu * piṉ
peycci pālai uṇṭu paṇṭu * or eṉam āya vāmaṉā (37)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

788. You took the forms of a dwarf and a boar and you made the vilam fruits fall and destroyed the Asurans You made the blooming kurundam tree fall, you killed the Asuran Kesi and you split open the mouth of the Asuran who came as a bird. People say that you are Kannan and that is why you could do all these things with your strong hands. You drank the milk of the cowherdess Yashodā, ate mud, you stole butter and ate it, and you drank the milk of the devil Putanā.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காய்த்த காய்கள் நிறைந்ததும்; நீள் உயர்த்தியுடையதுமான; விளங்கனி விளாங்கனிகளை; உதிர்த்து உதிரச்செய்து; எதிர்ந்த வழியில் நின்ற; பூங் பூத்து நிற்கும்; குருந்தம் குருந்த மரமாக இருந்த அசுரனை; சாய்த்து வீழ்த்தி; மா குதிரையாக வந்த கேசியென்னும் அசுரனை; பிளந்த இரு துண்டமாகப் பிளந்த; கை தலத்த கைகளையுடைய; கண்ணன் கண்ணன்; என்பரால் என்று ஞானிகள் சொல்லுவார்கள்; ஆய்ச்சிபாலை உண்டு யசோதையின் பாலை உண்டு; வெண்ணெய் உண்டு வெண்ணெய் உண்டு பின்; பேய்ச்சி பாலை உண்டு பூதனையின் பாலை உண்டு; பின் மண்ணை பிரளய காலத்தில்; உண்டு பூமியை திருவயிற்றிலே வைத்து; பண்டு கல்பத்தின் ஆதியிலே; ஓர் ஏனமாய ஒரு வராஹமாய் அவதரித்த; வாமனா! வாமனனாக அவதரித்தவனே!