TCV 36

கோபியருடன் குலாவியவன்

787 ஆடகத்தபூண்முலைய சோதையாய்ச்சிபிள்ளையாய் *
சாடுதைத்தோர்புள்ளதாவி கள்ளதாயபேய்மகள் *
வீடவைத்தவெய்யகொங்கை ஐயபாலமுதுசெய்து *
ஆடகக்கைமாதர்வாயமுதம் உண்டதென்கொலோ?
787 āṭakatta pūṇ-mulai * yacotai āycci pil̤l̤aiyāy *
cāṭu utaittu or pul̤l̤atu āvi * kal̤l̤a tāya peymakal̤ **
vīṭa vaitta vĕyya kŏṅkai * aiya pāl amutu cĕytu *
āṭakak kai mātar vāy * amutam uṇṭatu ĕṉ kŏlo? (36)

Ragam

Biyāgadai / பியாகடை

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Simple Translation

787. You who were raised by the cowherdess Yashodā with breasts decorated with beautiful ornaments destroyed Sakatāsuran when he came as a cart, took the life of an Asuran when he came as a bird, and you drank milk from the breasts of the deceiving devil Putanā. How could you drink the nectar from the mouths of women ornamented with golden bracelets on their hands?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆடகத்த பொன்மயமான; பூண் முலை ஆபரணங்களையணிந்த; யசோதை ஆய்ச்சி யசோதைக்கு; பிள்ளையாய் மகனாய்; சாடு சகடாசுரனை; உதைத்து உதைத் தொழித்து; ஓர் புள்ளது ஒரு பறவையின்; ஆவி கருத்தையுடையவளாய்; கள்ள தாய கள்ள தாயான; வீட நீ அழிவதற்காக உன் வாயிலே; வைத்த வைத்த கொடிய; வெய்ய கொங்கை ஐய விஷமுடைய; அமுது செய்து பாலை உண்டு; ஆடக பொன்வளைகள் அணிந்த; கை கைகளையுடைய; மாதர் வாய் ஸ்த்ரீகளினுடைய அதரத்திலுள்ள; அமுதம் அமுதத்தை; உண்டது என்கொலோ பருகினது என்ன ஆச்சர்யம்!